» சினிமா » செய்திகள்

ஆசிய திரைப்பட விருதுகள்: பொன்னியின் செல்வன் 6 பிரிவுகளில் பரிந்துரை!

சனி 7, ஜனவரி 2023 4:52:04 PM (IST)



ஹாங்காங்கில் நடைபெற இருக்கும் 16வது ஆசிய திரைப்பட விருதுகளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 6 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கல்கி எழுதிய நாவலைத் தழுவி மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படம் பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தியது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்

இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் 2 பாகங்களாக உருவாக்கியுள்ளார். இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், தற்போது அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை படக்குழு மேற்கொண்டு வருகிறது. இதனிடையே 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் 2-ம் பாகம் வரும் 2023 ஏப்ரல் 28-ந்தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஹாங்காங்கில் நடைபெற இருக்கும் 16வது ஆசிய திரைப்பட விருதுகளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 6 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆசிய பிலிம் விருதுகள் அமைப்பு 16வது ஆசிய திரைப்பட விருதுகளுக்கான செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியது. இதில் ஆசிய திரைப்பட விருதுகளின் போட்டிப்பிரிவில் பரிந்துரை செய்யப்பட்ட படங்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை பரிந்துரை குழு அறிவித்தது.

இதன்படி பொன்னியின் செல்வன் திரைப்படம் சிறந்த படம், சிறந்த இசை, சிறந்த எடிட்டிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கலை இயக்குனர், சிறந்த உடை அலங்காரம், உள்ளிட்ட 6 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.மேலும் பாகுபலி இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் இரண்டு பிரிவுகளில் பரிந்துரையாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory