» சினிமா » செய்திகள்

ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்கள் வெளியீடு: சைபர் கிரைம் போலீஸில் நடிகை புகார்

சனி 31, டிசம்பர் 2022 10:42:57 AM (IST)

சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்கள் வெளியீட்ட நவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீஸில் நடிகை பிரவீனா புகார் அளித்துள்ளார். 

மலையாள நடிகையான பிரவீனா, தமிழில் ‘வெற்றிவேல்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கோமாளி’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். ‘ராஜா- ராணி’, ‘பிரியமானவள்’ உட்பட டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர், தனது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக அளித்தப் புகாரை அடுத்து கடந்த வருடம் பாக்யராஜ் என்ற மாணவரை, போலீஸார் டெல்லியில் கைது செய்தனர். பின் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

இந்நிலையில் பிரவீனா மகளும் சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதுபற்றி பிரவீனா கூறும்போது, "நான் போலீஸில் புகார் கொடுத்ததை அடுத்து பழிவாங்கும் நோக்கத்துடன் அந்த நபர் செயல்பட்டு வருகிறார். என் மகள், அம்மா, சகோதரி, நண்பர்கள் ஆகியோரின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து வெளியிட்டு வருகிறார். இவ்வளவு வக்ரமாகவும் மனநோயாளியாகவும் யாராவது இருக்க முடியுமா?” என்று கேட்டுள்ள நடிகை பிரவீனா, தனது மகளும் சைபர் கிரைமில் இதுபற்றி புகார் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?

திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory