» சினிமா » செய்திகள்

அங்காரகன் படத்தின் மூலம் சத்யராஜ் மீண்டும் வில்லன் அவதாரம்!

புதன் 21, டிசம்பர் 2022 12:28:11 PM (IST)



ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’. 

இந்த படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் ஸ்ரீபதி. இவர் பிரபல சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் சீனியர் மேலாளராக பணியாற்றியவர். சினிமாவின் மீது, குறிப்பாக நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார்.

இந்த படத்தை மோகன் டச்சு என்பவர் இயக்குகிறார். இவர் பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மாவிடம் சர்க்கார்-3, கில்லிங் வீரப்பன் மற்றும் சின்ட்ரெல்லா ஆகிய படங்களில் உதவி இயக்குனராக, ஒளிப்பதிவாளராக  பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.

இந்த படத்தில் டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். மலையாள நடிகை நியா இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். சமீபத்தில் மலையாளத்தில் இயக்குனர் வினயன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பத்தொன்பதாம் நூற்றாண்டு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நியா, தெலுங்கில் காமெடி நடிகர் அலியுடன் இணைந்து லாயர் விஸ்வநாத் படத்திலும் நடித்துள்ளார். மேலும் அங்காடித்தெரு மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடலான ஜாலியோ ஜிம்கானா உள்ளிட்ட 125க்கும் மேற்பட்ட சூப்பர்ஹிட் பாடல்களை எழுதிய கு.கார்த்திக் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் வசனங்களில் பங்களிப்பு செய்த கருந்தேள் ராஜேஷ் இந்த படத்தின் வசனங்களை எழுதியுள்ளார். இந்த படம் 2023 கோடை விடுமுறைக்கு வெளியாகும் வரையில் தயாராகி வருகிறது  என படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் S.கிறிஸ்டி கூறியுள்ளார் 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory