» சினிமா » செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!
திங்கள் 12, டிசம்பர் 2022 11:46:31 AM (IST)
இன்று பிறந்தநாள் காணும் நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.12), நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்," என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், அன்பு சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட ஆயுளோடும் நல் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை: இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ பிரார்த்திக்கிறேன்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: இன்று 73-ஆவது பிறந்தநாள் காணும் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன்: அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் வெற்றிப் பயணம் தொடர இச்சிறந்த நாளில் வாழ்த்துகிறேன்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசன் படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது: விஜய் சேதுபதி
வியாழன் 18, டிசம்பர் 2025 12:15:47 PM (IST)

வாரணாசி படப்பிடிப்பிற்கு என்னை கூப்பிடுங்கள்: ராஜமவுலியுடன் ஜேம்ஸ் கேமரூன் நேர்காணல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:10:38 PM (IST)

அழகாக பேசுபவர்கள் எல்லாம் முதல்வராக முடியாது: நடிகர் கிச்சா சுதீப் பேட்டி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:42:42 PM (IST)

ரெட்ட தல கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும்: அருண் விஜய் நம்பிக்கை!
புதன் 17, டிசம்பர் 2025 10:20:01 AM (IST)

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?
திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

