» சினிமா » செய்திகள்
சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதாக புகார்: காவல் நிலையத்தில் ராஜ்கிரன் மனைவி ஆஜர்!
சனி 3, டிசம்பர் 2022 4:54:06 PM (IST)

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத்பிரியா, டிவி நடிகர் முனீஸ்ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் அவரது தாய் கதீஜா மற்றும் ராஜ்கிரணுக்கு உடன்பாடு இல்லை. இதையடுத்து ராஜ்கிரண் தனது வளர்ப்பு மகளை தனது பெயரை எங்கும் பயன்படுத்தக் கூடாது, எனது வளர்ப்பு மகள் இல்லை என அறிவித்தார். இதையடுத்து ஜீனத்பிரியா கணவர் முனீஸ்ராஜுடன் தனது முதல் தந்தை இளங்கோவிடம் துறையூரில் தஞ்சம் அடைந்தனர்.
தற்போது துறையூரில் இளங்கோவனுடன் ஜீனத்பிரியா மற்றும் முனீஸ்ராஜ் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜ்கிரண் மற்றும் தாய் கதீஜா ஆகியோர் குறித்து மகள் ஜீனத்பிரியா சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கதீஜா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். சென்னை கமிஷனர் புகாரை திருச்சி மாவட்ட எஸ்.பி வழியாக முசிறி போலீஸ் டிஎஸ்பி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.
இதையடுத்து முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின், முசிறி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் காவேரி முன்னிலையில் நேற்றுமுன்தினம் விசாரணை செய்தார். விசாரணைக்கு ஜீனத்பிரியா தரப்பினர் மட்டுமே ஆஜரானார்கள். இந்தநிலையில் இரு தரப்பும் ஆஜராகும் படி டிஎஸ்பி யாஸ்மின் உத்தரவிட்டார். அதன் பேரில் நேற்று கதீஜா, ஜீனத்பிரியா தரப்பினரும் டிஎஸ்பி யாஸ்மின் முன்னிலையில் ஆஜரான நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் இருதரப்பினரும் சமூக வலைத்தளங்கள் வழியாக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வீடியோ, ஆடியோ வெளியிடக்கூடாது. இரு தரப்பினருக்கும் பிரச்சினை ஏற்படுமாயின் காவல்துறை மற்றும் நீதிமன்றங்கள் வாயிலாக தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டு முசிறி போலீஸ் டிஎஸ்பி அலுவலகத்தில் போலீசாரின் அறிவுரைப்படி செயல்படுவதாக எழுதி கொடுத்துவிட்டு சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசன் படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது: விஜய் சேதுபதி
வியாழன் 18, டிசம்பர் 2025 12:15:47 PM (IST)

வாரணாசி படப்பிடிப்பிற்கு என்னை கூப்பிடுங்கள்: ராஜமவுலியுடன் ஜேம்ஸ் கேமரூன் நேர்காணல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:10:38 PM (IST)

அழகாக பேசுபவர்கள் எல்லாம் முதல்வராக முடியாது: நடிகர் கிச்சா சுதீப் பேட்டி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:42:42 PM (IST)

ரெட்ட தல கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும்: அருண் விஜய் நம்பிக்கை!
புதன் 17, டிசம்பர் 2025 10:20:01 AM (IST)

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?
திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

