» சினிமா » செய்திகள்
கமல் நடிக்கும் 234வது படம்: மணிரத்னம் இயக்குகிறார்!
திங்கள் 7, நவம்பர் 2022 12:43:41 PM (IST)

கமல் நடிக்கவுள்ள 234வது படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் - மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது.
விக்ரம் திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்துள்ள கமல்ஹாசன், தற்போது இந்தியன் 2 படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 அடுத்தாண்டு ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கமல்ஹ்சாசன் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பை கமல் அறிவித்துள்ளார்.
இதில், 35 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் - மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. கமலின் 234வது படமான இதனை ராஜ்கமல் ஃபிலிம்ஸ், ரெட் ஜெயன்ட், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கின்றன. இந்தப் படத்தின் ஷுட்டிங் அடுத்தாண்டு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், 2024ல் படம் வெளியாகும் எனவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
1987ல் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் திரைப்படம் இந்திய சினிமாவில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்ததோடு, இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நாயகன் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்த நிலையில், தற்போது உருவாகவுள்ள 'கமல் 234' படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசன் படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது: விஜய் சேதுபதி
வியாழன் 18, டிசம்பர் 2025 12:15:47 PM (IST)

வாரணாசி படப்பிடிப்பிற்கு என்னை கூப்பிடுங்கள்: ராஜமவுலியுடன் ஜேம்ஸ் கேமரூன் நேர்காணல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:10:38 PM (IST)

அழகாக பேசுபவர்கள் எல்லாம் முதல்வராக முடியாது: நடிகர் கிச்சா சுதீப் பேட்டி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:42:42 PM (IST)

ரெட்ட தல கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும்: அருண் விஜய் நம்பிக்கை!
புதன் 17, டிசம்பர் 2025 10:20:01 AM (IST)

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?
திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

