» சினிமா » செய்திகள்

சிம்புவின் பத்து தல ரிலீஸ் குறித்து புதிய அப்டேட்!

திங்கள் 31, அக்டோபர் 2022 12:08:47 PM (IST)

சிம்பு நடிப்பில் வெளியாகவுள்ள பத்து தல திரைபடத்தின் வெளியீட்டு தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற மஃப்டி திரைப்படம் தமிழில் சிம்பு நடிப்பில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது. இந்தப் படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார்.  கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். 

இந்தப் படத்தின் பாடல் காட்சி ஒன்று ஹைதராபாத்தில் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றது. இன்னும் 8 நாள்களில் படத்தின் முழுப் பணிகளும் நிறைவடைந்துவிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நவம்பர் மாதம் மத்தியில் பட வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும், ஜனவரி அல்லது பிப்ரவரியில் திரையரங்குகளில் படம் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?

திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory