» சினிமா » செய்திகள்
மலையாள ஆல்பத்தில் இருந்து காந்தாரா பாடல் திருட்டு: இசையமைப்பாளர் மீது புகார்!
வியாழன் 27, அக்டோபர் 2022 4:57:26 PM (IST)

காந்தாரா திரைப்படத்தில் 'வராஹ ரூபம்’ பாடல் 'நவரசம்' ஆல்பத்தில் இருந்து திருடப்பட்டுள்ளதாக இசைக்குழுவினரின் குற்றம் சாட்டியுள்ளனர்.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா என்ற கன்னட திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்து வெளியிட்டும் வரவேற்பை பெற்றது. ரூ.17 கோடி செலவில் தயாரான இந்த படம் இந்தியா முழுவதும் இதுவரை ரூ.170 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. கே.ஜி.எப் படத்துக்கு பிறகு இந்திய அளவில் அதிகம் பேசப்படும் கன்னட படமாக காந்தாரா மாறி உள்ளது. இப்படத்தை ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில்,இப்படத்தில் இடம்பெறும் 'வராஹ ரூபம்' பாடல் தங்களின் 'நவரசம்' ஆல்பமில் இருந்து திருடப்பட்டுள்ளதாக தைக்குடம் இசைக்குழுவினரின் சமூக வலைதள பக்கத்தில் குற்றம் சாட்டியது. மேலும் இது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டிற்கு காந்தாரா படத்தின் இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில் "இரண்டு பாடல்களும் ஒரே ராகத்தில் இசையமைக்கப்பட்டுள்ளதால் ஒன்று போல் தோன்றலாம்" என மறுப்பு தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசன் படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது: விஜய் சேதுபதி
வியாழன் 18, டிசம்பர் 2025 12:15:47 PM (IST)

வாரணாசி படப்பிடிப்பிற்கு என்னை கூப்பிடுங்கள்: ராஜமவுலியுடன் ஜேம்ஸ் கேமரூன் நேர்காணல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:10:38 PM (IST)

அழகாக பேசுபவர்கள் எல்லாம் முதல்வராக முடியாது: நடிகர் கிச்சா சுதீப் பேட்டி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:42:42 PM (IST)

ரெட்ட தல கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும்: அருண் விஜய் நம்பிக்கை!
புதன் 17, டிசம்பர் 2025 10:20:01 AM (IST)

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?
திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)


santhiyaOct 30, 2022 - 07:46:51 PM | Posted IP 162.1*****