» சினிமா » செய்திகள்
தோனி தயாரிக்கும் தமிழ் படம்: தமிழ்மணி இயக்குகிறார்!
புதன் 26, அக்டோபர் 2022 12:00:11 PM (IST)

தோனி தயாரிக்கும் தமிழ் படத்தை படத்தை இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்க உள்ளார்.
கிரிக்கெட் வீரர் தோனி சினிமா படங்கள் தயாரிப்பில் களம் இறங்கியுள்ளார். சமீபத்தில் சொந்தமாக தனது மனைவி சாக் ஷியுடன் இணைந்து தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற பெயரில் பட நிறுவனம் தொடங்கினார். இந்த பட நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய ஐபிஎல் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு பிரபலமான '''ரோர் ஆப் தி லயன்' எனும் ஆவணப் படத்தையும், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தையும் தயாரித்தது. இந்த நிலையில் அடுத்து தோனி தமிழ் படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்து உள்ளார்.
இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி டைரக்டு செய்கிறார். படத்துக்கான கதை கருவை தோனியின் மனைவி சாக் ஷி எழுதி உள்ளார். ரமேஷ் தமிழ்மணி கூறும்போது, ''சாக்ஷி தோனி எழுதிய கதையின் கருவைப் படித்தபோது அதன் தனித்துவத்தை என்னால் உணரமுடிந்தது. இந்தக் கதை குடும்பங்களை மகிழ்வூட்டி, சிரிக்கவைத்து சிந்திக்கவைக்கும். ஒரு சிறந்த திரைப்படத்தை மக்களுக்குக் கொடுக்கப்போகிறோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்' என்றார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசன் படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது: விஜய் சேதுபதி
வியாழன் 18, டிசம்பர் 2025 12:15:47 PM (IST)

வாரணாசி படப்பிடிப்பிற்கு என்னை கூப்பிடுங்கள்: ராஜமவுலியுடன் ஜேம்ஸ் கேமரூன் நேர்காணல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:10:38 PM (IST)

அழகாக பேசுபவர்கள் எல்லாம் முதல்வராக முடியாது: நடிகர் கிச்சா சுதீப் பேட்டி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:42:42 PM (IST)

ரெட்ட தல கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும்: அருண் விஜய் நம்பிக்கை!
புதன் 17, டிசம்பர் 2025 10:20:01 AM (IST)

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?
திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

