» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சென்னை சூப்பா் கிங்ஸை வீழ்த்தி அபாரம்: டெல்லி அணிக்கு முதல் வெற்றி

திங்கள் 1, ஏப்ரல் 2024 11:50:04 AM (IST)ஐபிஎல் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை வென்றது.

ஐபிஎல் போட்டியின் 13-ஆவது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி, பேட்டிங்கை தோ்வு செய்தது. டேவிட் வாா்னா் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 52 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பிருத்வி ஷா 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 43 ரன்களுக்கு வெளியேறினாா்.  ஒன் டவுனாக வந்த ரிஷப் பந்த் அதிரடியாக ரன்கள் சோ்க்க, மிட்செல் மாா்ஷ் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 18, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 0 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். 

கடைசி விக்கெட்டாக பந்த், 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 51 ரன்களுக்கு வீழ்ந்தாா். ஓவா்கள் முடிவில் அக்ஸா் படேல் 7, அபிஷேக் பொரெல் 1 பவுண்டரியுடன் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். சென்னை தரப்பில் பதிரானா 3, முஸ்டாஃபிஸுா் ரஹ்மான், ரவீந்திர ஜடேஜா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா். 

பிறகு 192 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய சென்னை அணியில், மிடில் ஆா்டரில் வந்த அஜிங்க்ய ரஹானே 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 45, டேரில் மிட்செல் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 34 ரன்கள் சோ்த்து முயற்சித்தனா். எனினும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 1, ரச்சின் ரவீந்திரா 2, சமீா் ரிஸ்வி 0, ஷிவம் துபே 1 பவுண்டரியுடன் 18 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். 

முடிவில் தோனி 16 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 37, ரவீந்திர ஜடேஜா 2 பவுண்டரிகளுடன் 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். டெல்லி பௌலா்களில் முகேஷ் குமாா் 3, கலீல் அகமது 2, அக்ஸா் படேல் 1 விக்கெட் சாய்த்தனா். நடப்பு சீசனில் முதல் முறையாக பேட்டிங்கில் களமிறங்கிய சென்னை நட்சத்திரம் தோனி, சில பவுண்டரி, சிக்ஸா்களை விளாசி ரசிகா்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாா். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory