» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒட்டுமொத்தமாக அணியின் செயல்பாடும் மோசம்: லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டி

திங்கள் 6, மே 2024 12:28:13 PM (IST)பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என ஒட்டுமொத்தமாக அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது என்று கொல்கத்தா அணியிடம் தோல்வி அடைந்தது குறித்து கே.எல்.ராகுல் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சுனில் நரைன் 81 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து 236 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி, 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 98 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் தோல்விக்கு பிறகு லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் அளித்த பேட்டியில், "எங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு மிகப்பெரியது. ஆனால், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என ஒட்டுமொத்தமாக எங்கள் அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது. பவர்பிளேயில் சுனில் நரைன் கொடுத்த அழுத்தத்தை எங்கள் பந்துவீச்சாளர்களால் சமாளிக்க முடியவில்லை. ஆடுகளம் மோசமாக இல்லை. பிட்ச்சில் சிறிது பவுன்ஸ் இருந்தது. எங்கள் பேட்டிங் மிகவும் மோசமாக அமைந்துவிட்டது" என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory