» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வருண் சக்ரவர்த்தி அபாரம் : டெல்லி அணியை விழ்த்திய கோல்கட்டா!

செவ்வாய் 30, ஏப்ரல் 2024 12:48:07 PM (IST)சுழலில் வருண் சக்ரவர்த்தி மிரட்ட, டெல்லி அணியை கோல்கட்டா 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல்., போட்டியில் டெல்லி, கோல்கட்டா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷாப் பன்ட், பேட்டிங் தேர்வு செய்தார். டெல்லி அணிக்கு பிரேசர்(12), பிரித்வி ஷா(13) ஏமாற்றினர். அடுத்து 'மிடில் ஆர்டரில்' களமிறங்கிய வீரர்களும் டெல்லி அணியை கைவிட்டனர். ரிஷாப், அபிஷேக் போரல் ஜோடி சேர்ந்தனர். ஷாய் ஹோப் (6), ஒரு சிக்சர் மட்டும் அடித்து பெவிலியன் திரும்பினார். 

ஹர்ஷித் ராணா வீசிய ஐந்தாவது ஓவரில் மிரட்டிய அபிஷேக், 4, 6, 4 என அடுத்தடுத்து விளாச, இந்த ஓவரில் 16 ரன் எடுக்கப்பட்டன. மறுபக்கம் நரைன் பந்தை ரிஷாப் சிக்சருக்கு விரட்ட, டெல்லி அணி 6 ஓவரில் 67/3 ரன் எடுத்தது. ஹர்ஷித் இம்முறை அபிஷேக்கை (18) அவுட்டாக்கினார். வருண் சக்கரவர்த்தி சுழலில் ரிஷாப் (27) அவுட்டானார். இதன் பின் ரன்வேகம் குறைந்தது. 

கோல்கட்டா அணிக்காக பந்தை சுழற்றிய வருண் சக்ரவர்த்தி, முதலில் ஸ்டப்சை (4) அவுட்டாக்கினார். சற்று தாக்குப் பிடித்த அக்சர் படேலை (15), நரைன் போல்டாக்கினார். மீண்டும் மிரட்டிய வருண், குமார் குஷாக்ராவை (1) அவுட்டாக்கி அசத்தினார். டெல்லி அணி 111 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து திணறியது. கடைசி கட்டத்தில் குல்தீப் (34) கைகொடுக்க, டெல்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 153 ரன் எடுத்தது. 

கோல்கட்டா அணிக்கு சுனில் நரைன் (15), பில் சால்ட் ஜோடி துவக்கம் தந்தது. கலீல் அகமது பந்தை சிக்சருக்கு அனுப்பிய சால்ட், 26 வது பந்தில் அரைசதம் கடந்தார். இவர் 68 ரன்னில், அக்சர் பந்தில் போல்டானார். ரிங்கு சிங் 11 ரன் மட்டும் எடுத்தார். அடுத்து இணைந்த வெங்கடேஷ் (26), கேப்டன் ஸ்ரேயாஸ் (31) ஜோடி அவுட்டாகாமல் இருந்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றது. கோல்கட்டா அணி 16.3 ஓவரில் 156/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது. 11 போட்டியில் 6ல் தோற்ற டெல்லி அணியின் 'பிளே ஆப்' வாய்ப்பு மங்கியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory