» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆட்ட நாயகன் எண்ணிக்கையைவிட தரமே முக்கியம் : விராட் கோலி!

வெள்ளி 10, மே 2024 11:54:02 AM (IST)



சுயமரியாதைக்காக விளையாட விரும்பினோம். ஆட்ட நாயகன் எண்ணிக்கையைவிட தரமே முக்கியம் என விராட் கோலிக் கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியின் 58-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 60 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வியாழக்கிழமை வீழ்த்தியது. முதலில் பெங்களூரு 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ரன்கள் சோ்க்க, பஞ்சாப் 17 ஓவா்களில் 181 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இந்த வெற்றியின் மூலம் பிளே-ஆஃப் பந்தயத்தில் தன்னை தக்கவைத்துக் கொண்டுள்ளது பெங்களூரு.

அதிரடியாக விளையாடிய விராட் கோலி 92 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார். ஆட்ட நாயகன் விருது பெற்ற பின் விராட் கோலி பேசியதாவது: என்னைப்பொறுத்த வரையில் ரன்களின் எண்ணிக்கையைவிட தரமே முக்கியமானது. எனக்கு இந்த தத்துவம் நன்றாக வேலை செய்கிறது. விளையாட்டினை புரிந்துகொண்டு விளையாடும்போது பயிற்சி குறைவாக தேவைப்படுகிறது. இதற்கு முன்பு நாம் என்ன செய்தேனோ அதையே செய்தால் போதுமானதாக இருக்கிறது. 

இருப்பினும் போட்டியில் சிறப்பாக செயல்பட சில இடங்களில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. இது ஒரு படிப்படியான பரிணாமத்தைச் சார்ந்தது. சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஸ்லாக் ஸ்வீப் ஷாட் அடித்தேன். அதற்காக தனியாக பயிற்சி எடுக்கவில்லை. ஆனால் முந்தைய காலத்தில் ஆடியிருக்கிறேன். சுழல் பந்துக்கு எதிராக அதிரடியாக ஆட வேண்டியுள்ளது. ரிஸ்க் எடுக்க வேண்டும் என தெரியும். அதை ஒரு தீர்க்கமான முடிவுடன் எடுத்தேன்.

ஸ்டிரைக் ரேட்டினையும் சரியாக வைத்துகொள்ள முயன்றேன். அது எனக்கும் எனது அணிக்கும் உதவியது. இந்தத் தொடரில் நாங்கள் நேர்மையாக விளையாடுவது மட்டுமே எங்களுக்கு இருக்கும் ஒரே வழியாகும். தொடர் தோல்வியில் இருக்கும்போது எங்களுக்குள் நேர்மறையான விவாதம் தேவைப்பட்டது. கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் மிகவும் த்ரில்லிங்காக சென்றது. 

நாங்கள் எங்களது சுயமரியாதைக்காக விளையாட விரும்பினோம். கடமைக்காக சென்று விளையாடி எங்களது ரசிகர்களை வருத்தமடைய விடக்கூடாது. அணியாக நம்பிக்கை மீண்டும் வந்துள்ளது. நாங்கள் மற்ற விஷயங்களை சார்ந்திருக்காமல் தொடரின் தொடக்கத்தில் நன்றாக விளையாடியிருக்க வேண்டும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital




New Shape Tailors



Thoothukudi Business Directory