» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பெங்களூரு அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு நீடிப்பு: டெல்லி வெளியேற்றம்!

திங்கள் 13, மே 2024 3:58:46 PM (IST)டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றில் நுழையும் வாய்ப்பில் நீடிக்கிறது.

டெல்லி கேபிட்டல்ஸ்-பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 62-ஆவது ஆட்டம் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி பெüலிங்கை தேர்வு செய்ய பெங்களூரு தரப்பில் விராட் கோலி-கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் தொடக்க பேட்டர்களாக களமிறங்கினர். டூ பிளெஸ்ஸிஸ் 6 ரன்களுக்கும், விராட் கோலி 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 27 ரன்களுக்கும் அவுட்டாகி வெளியேறினர்.

2 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 29 பந்துகளில் 41 ரன்களைச் சேர்த்த வில் ஜேக்ஸ் அவுட்டாக்கினார் குல்தீப் யாதவ். ரஜத் பட்டிதார் தலா 3 சிக்ஸர், பவுண்டரியுடன் 32 பந்துகளில் 52 ரன்களுடன் அரைசதம் விளாசி ரஷீக் சலாம் பந்தில் வெளியேறினார். கேமரூன் கிரீன் மட்டுமே 32 ரன்களுடன் இறுதிவரை களத்தில் இருந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு 187/9 ரன்களைக் குவித்தது. பெüலிங்கில் டெல்லி தரப்பில் கலீல் அகமது 2-31, ரஷீக் சலாம் 2-23 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட டெல்லி அணியில் அக்ஸர் படேல் தவிர ஏனைய வீரர்கள் சொற்ப ரன்களுடன் அவுட்டாகி வெளியேறினர். அக்ஸர் படேல் மட்டுமே 3 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 39 பந்துகளில் 57 ரன்களுடன் அரைசதம் பதிவு செய்தார்.

19.1 ஓவர்களில் டெல்லி அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பெங்களூரு தரப்பில் யாஷ் தயால் 3-20, லாக்கி பெர்குஸன் 2-23 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியால் பெங்களூர் அணி 5-ஆவது இடத்துக்கு முன்னேறி 12 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றில் நுழையும் வாய்ப்பையும் தக்க வைத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory