» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தனியார் நிறுவனத்தில் பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம்: அ.தி.மு.க. பிரமுகர் மகன் கைது

சனி 18, ஜனவரி 2025 9:07:46 AM (IST)

நெல்லையில் தனியார் குடிநீர் கேன் நிறுவனத்தில் பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக அந்த நிறுவன உரிமையாளரான அ.தி.மு.க. பிரமுகர் மகனை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: நெல்லை தாழையூத்து பகுதியைச் சேர்ந்தவர் மீரான். அ.தி.மு.க. பிரமுகர். இவருடைய மகன் முகமது ஜர்ஜின் (வயது 29). இவர் நெல்லை டவுன் மற்றும் தாழையூத்து பகுதியில் குடிநீர் கேன் வினியோகம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர்.

இவருடைய நிறுவனத்தில் ஆண்கள், பெண்கள் என ஏராளமாேனார் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களில் ஒரு பெண் ஊழியரை கடந்த சில நாட்களுக்கு முன்பு முகமது ஜர்ஜின், தனது ஆசைக்கு இணங்க அழைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு அந்தப் பெண் மறுத்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த முகமது ஜர்ஜின், அவரை சாதியை சொல்லி அவதூறாக பேசினார். பின்னர் அந்த பெண்ணை தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், இதுபற்றி நெல்லை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பாலியல் பலாத்காரம், சாதி பெயரை சொல்லி அவதூறாக பேசுதல், தாக்குதல் என 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெகதா ஆகியோர் விசாரணை நடத்தி, முகமது ஜர்ஜினை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த இளம்பெண்ணை சாதி பெயரை சொல்லி அவதூறாக பேசி, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital


New Shape Tailors





Thoothukudi Business Directory