» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டில் ரயில்வே துறை வளர்ச்சிக்கு தனி அமைச்சகம் : பயணிகள் சங்கம் கோரிக்கை

வெள்ளி 17, ஜனவரி 2025 4:26:41 PM (IST)

தமிழ்நாட்டில் ரயில்வே துறை வளர்ச்சிக்கு தனி அமைச்சகம் மற்றும் தலைமை செயலகத்தில் தனி செயலகம் அமைக்க வேண்டும் என பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ரயில்வே பயணிகள் சங்கம் தலைவர் எஸ்.ஆர் ஸ்ரீராம் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு : சமீபத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அவர்கள் சென்னைக்கு வந்தபோது மதுரை – தூத்துக்குடி இருப்பு பாதை திட்டம் குறித்து கருத்து தமிழ்நாடு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அதற்கு அடுத்து ரயில்வே துறை சார்பாக கொடுக்கப்பட்ட விளக்கத்தையும் பார்த்தது. இந்த சம்பவத்தில் இருந்து நாங்கள் அறிந்து கொண்டது என்னவென்றால் தமிழ்நாடு ரயில்வே துறை வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ளது.

தமிழகத்தின் பக்கத்து மாநிலமான கேரளா ரயில்வே துறையில் தமிழகத்தை விடவும் 20 வருடம் முன்னோக்கி சென்று வளர்ச்சி அடைந்து காணப்படுகிறது. இதற்கு மிக மிக முக்கிய காரணம் மாநிலத்தில் தனி ரயில்வே அமைச்சர் என்றால் மிகையாகாது. கேரளாவில் உள்ள 1050 கி.மீ தூரம் இருப்பு பாதை கொண்ட கேரளாவில் ரயில்வே வளர்ச்சிக்கு என அமைச்சர் செயல்பட்டு புதிய ரயில்வே திட்டங்களை இந்திய ஒன்றிய அரசிடம் கேட்டு போராடி பெற்று வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. 

கேரளா அமைச்சர் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டிற்கு முன்பு அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட மக்களின் கோரிக்கைகளை தொகுத்து மிகப்பெரிய கோரிக்கை பட்டியல் தயார் செய்து இந்திய ஒன்றிய ரயில்வே அமைச்சரை நேரடியாக சந்தித்து அவர்கள் மாநில கோரிக்கையை சாதித்து கொள்கின்றனர். இதனால் பட்ஜெட்டின் போது அதிக நிதி ஒதுக்கீடு, புதிய ரயில்கள் என சாதித்து கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு மாநிலம் ரயில்வே துறையில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து சுமார் 3000 கி.மீ அளவுக்கு புதிய இருப்புபாதை அமைப்பதற்கு சர்வே செய்யப்பட்டு செயல்படுத்தபடாமல் உள்ளது.

ரயில்வேக்கு தனி அமைச்சகம்;

தமிழ்நாட்டில் அமைச்சரவையில் நீர்வளத்துறை, காலநிலை மாற்றத் துறை என்று புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உருவாக்கப்பட்ட போன்று தமிழக ரயில்வே துறையில் வளர்ச்சி பெறுவதற்கு, தமிழக பயணிகள் பயன்படும் விதமாக புதிய ரயில்கள் இயக்குதல், தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் பாதையை இருவழிப்பாதையாக மாற்றம் செய்தல் புதிய ரயில் இருப்பு பாதைகள் அமைக்கும், என பல ரயில்வே திட்டங்கள் நடைமுறைப்படுத்திட வேண்டியுள்ளது. இதற்கு தமிழக அமைச்சரவையில் ரயில்வே வளர்ச்சி துறைக்கு என தனி அமைச்சகம் அமைத்து அதற்கு அமைச்சரையும் தலைமை செயலகத்தில் தனித்துறை அமைத்து அதற்கு ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று தாழ்மையாக கேட்டு கொள்கிறோம். 

மாவட்ட அளவில் ரயில்வே அதிகாரி நியமிக்க கோரிக்கை:

மாவட்ட அளவில் ரயில்வே வளர்ச்சிக்கு புதிய ரயில்களை இயக்கும், புதிய ரயில் வழித்தடங்கள் அமைத்தல், ரயில்வே அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து, ரயில்களுக்கு போதிய நிறுத்தம் செய்தல் இது போன்ற ரயில்வே சம்பந்தமான அனைத்து பணிகளையும் மத்திய அரசின் ரயில்வே துறையில் தெற்கு ரயில்வே மண்டல அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுத்துவதற்கு மாவட்ட அளவில் ரயில்வே அதிகாரி என்று ஒருவர் இருந்தால் நிச்சயமாக ரயில்வே துறையில் தமிழகம் வளர்ச்சி பெறும் என்று நம்புகிறோம். 

எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட அளவில் ரயில்வே சம்பந்தமான வளர்ச்சி பணிகளை கவனிப்பதற்கு என தனி அதிகாரியை District Railway Transport Development Officer என்ற பெயரில் அமைக்க வேண்டும். தமிழக முதல்வர் இந்த கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து தமிழக ரயில்வே வளர்ச்சிக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


Arputham Hospital






Thoothukudi Business Directory