» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக அரசியலின் அதிசயம்; கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர் : எம்ஜிஆருக்கு விஜய் புகழாரம்!

வெள்ளி 17, ஜனவரி 2025 12:31:38 PM (IST)



தமிழக அரசியலின் அதிசயம்; தமிழக அரசியல் வரலாற்றின் மையம் எம்.ஜி.ஆர். என்று  தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் புகழாரம் சூட்டினார்.

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், "அளவற்ற வறுமையைத் தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார். அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார். அவரே தமிழக அரசியலின் அதிசயம் ஆனார். இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம்" என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

MGR FANSJan 17, 2025 - 03:36:35 PM | Posted IP 162.1*****

கூத்தாடி என்றாலும் MGR ஏழைகளுக்கு உதவி செய்தார், மிக பெரிய தலைவராகி விட்டார். உங்களை போல சுயநலவாதிகள் உண்மையான கூத்தாடிகள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors


Arputham Hospital




Thoothukudi Business Directory