» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகர்கோவில் மாநகராட்சியில் மழைநீர் தேங்கிய பகுதிகளை ஆட்சியர் ஆய்வு

வெள்ளி 25, அக்டோபர் 2024 5:20:36 PM (IST)



நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட மழைநீர் தேங்கிய பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனடிப்படையில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (25.10.2024) நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்: 

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் வடகிழக்கு பருவமழை காரணமாக எந்ததெந்த பகுதிகளில் தண்ணீர் தேங்க வாய்ப்பு இருக்கிறதோ அப்பகுதிகளில் மீட்புபணிகளை துரிதப்படுத்தவும், மழைநீர் விரைவில் வடிவதை உறுதிசெய்யவும் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதனடிப்படையில் இன்று நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட செம்மாங்குளம் அவ்வை சண்முகம் சாலை மற்றும் கோட்டார் இரயில்வே சாலை பகுதிகள் வழியாக செல்லும் நீர்நிலைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, தண்ணீர் தேங்கும் பகுதிகளில் அடைப்பு ஏற்படின், அடைப்புகளை துரிதமாக அகற்றி, தண்ணீர் சீராக செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாநகராட்சி உட்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை இதுநாள் வரை வடகிழக்கு பருவமழையின் காரணமாக பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. இருப்பினும் பேரிடர் காலங்களில் அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டுமென கேட்டுக் கொள்வதோடு, அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழுஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


New Shape Tailors







Thoothukudi Business Directory