» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தாமிரபரணியில் கழிவு நீர் கலக்கும் வழக்கு: ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு!

வெள்ளி 25, அக்டோபர் 2024 10:29:44 AM (IST)

தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் நெல்லை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கடந்த 2018 ஆம் ஆண்டு மதுரை உயர்நீதி மன்றத்தில் தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலக்க கூடாது, தாமிரபரணி கரையில் உள்ள மண்டபங்கள் மற்றும் படித்துறைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு செய்திருந்தார். 

இந்த மனுவின் மீது கடந்த அக்டோபர் மாதம் 12 ந்தேதி மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அமர்வு தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பின் படி சாக்கடை கலக்காத நதியாக மாற்ற மாநகராட்சி கமிசனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்டபம் மற்றும் படித்துறையை சீரமைக்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தனர். 

இதற்கிடையில் இந்த வழக்கு மீது மீண்டும் மதுரை உயர்நீதி மன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜி.ஆர் . சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் இந்த வழக்கினை விசாரித்தார்கள். என்னுடைய தரப்பில் வழக்கறிஞர் டாக்டர் அழகு மணி ஆஜர் ஆனார். தாமிரபரணி குறித்த தீர்ப்புக்கான நடவடிக்கை என்ன எடுத்துள்ளார்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதியரர்கள் ஜி.ஆர். சாமிநாதன், புகழேந்தி ஆகியோர் விசாரித்ததோடு அடுத்த வாய்தாவுக்கு நெல்லை மாநகராட்சி ஆணையர் நேரில் வந்து ஆஜர் ஆக வேண்டும் என்று உத்தரவிட்டனர். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தினர் இந்த வழக்கில் ஆஜர் ஆக வேண்டும் என நீதியரசர்கள் கூறியிருந்தனர். ஆனால் அவர்கள் வழக்கறிஞரை ஆஜராக அனுப்பியிருந்தார்கள். 

எனவே நீதியரசர்கள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தினர் சிறிது நேரத்தில் வீடியோ கான்பரன்ஸ் காலில் ஆஜர் ஆக வேண்டும் என உத்தரவிட்டனர். இந்த உத்தரவின்படி அவர்கள் வீடியோ கால் மூலம் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் இதுவரை தாமிரபரணியை காப்பாற்ற எடுத்த நடவடிக்கை என்ன என்று கேட்டனர். அவர்கள் சாக்கடை கலக்க கூடாது என நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.

மேலும் 2021ஆம் ஆண்டு இதற்காக திருநெல்வேலி மாநகராட்சிக்கு 28கோடி ரூபாய் அபதாரம் விதித்துள்ளோம் என்று கூறினார். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து உள்ளீர்களா? என கேள்வி கேட்டனர் நீதியரசர்கள். மேலும் பேப்பர் மூலம் நடடிக்கை எடுத்துள்ளீர்கள். மற்றபடி என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என நீதியரசர்கள் கேட்டனர்.

தாமிரபரணியில் கழிவு நீரை கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் காலம் தாழ்த்துகீறீர்கள். இதற்காக கோர்ட் நடவடிக்கை எடுக்க வேண்டுமா? உத்தரவு இட வேண்டுமா? இதை நடை முறைப்படுத்த வேண்டமா? உங்களின் இந்தச்செயல் வருத்தமளிக்கிறது. கொஞ்ச நாள் அவகாசம் தருகிறோம். அதற்குள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்பது குறித்த ஆவணங்களை கோர்டில் நேரில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

சேரன்மகாதேவி பேரூராட்சியை சேர்ந்தவர்கள், எங்கள் பேரூராட்சி சாக்கடை எதுவுமே தாமிரபரணியில் கலக்க வில்லை என்று அறிக்கை தாக்கல் செய்தனர். இதற்காக நீதிமன்றம் மூலம் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் அருள் நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்வார் என நீதியரசர்கள் உத்தரவிட்டனர்.
 
மனுதாரரின் வழக்கறிஞர் டாக்டர் அழகுமணி, தாமிரபரணியில் சாக்கடை கலக்கும் அதிகாரிகள் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

நெல்லை மாநகராட்சி கமிஷனர் அடுத்த வாய்தாவில் நேரில் ஆஜர் ஆக வேண்டும் என உத்தரவிட்டார். மண்டபம், படித்துறை போன்றவற்றை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பராமரிக்க இயலவில்லை என்றால் அந்தந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைத்து பராமரிக்க வேண்டும். புதியதாக ஒரு மண்டபம் கட்டவேண்டும் என்பது கடினமானது. நமது முன்னோர்கள் இந்த வேலையை திறம்பட செய்துள்ளார்கள். 

ஆனால் நாமோ நமது முன்னோர்கள் உருவாக்கிய மண்டபங்கள், படித்துறைகளை பராமரிக்க தவறியுள்ளோம். என வருத்தம் தெரிவித்தனர். தொடர்ந்து இந்த வழக்கை ஒத்தி வைத்தார்கள். தொடர்ந்து தாமிரபரணியில் சாக்கடை கலப்பதை கட்டுப்படுத்த மதுரை உயர்நீதிமன்றம் எடுக்கும் நடவடிக்கை நிச்சயம் தாமிபரணியை பழைய நதியாக மீட்டு தருவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital

New Shape Tailors





Thoothukudi Business Directory