» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பணியிடங்களில் பாலியல் புகார் தெரிவிக்க புகார் பெட்டிகள்: ஆட்சியர் வழங்கினார்

வெள்ளி 25, அக்டோபர் 2024 11:44:02 AM (IST)



பணியிடங்களில் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவிக்க ஏதுவாக புகார் பெட்டிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நிறுவனங்களுக்கு வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் ”பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின் கீழ் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை (தடுப்பு, தீர்வு மற்றும் நிவர்த்தி) சட்டம் 2013 (POSH ACT LAUNCH– 2013) துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது 

”பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின் கீழ் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை (தடுப்பு, தீர்வு மற்றும் நிவர்த்தி) சட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் இயங்கும் நிறுவனங்களில் உள்ளக குழு கட்டாயம் அமைக்க வேண்டும். அனைத்து நிறுவனங்களும் உள்ளக குழு உறுப்பினர்களின் விவரங்களை அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அந்நிறுவனத்தின் கடமை என்று உணர்ந்து, மோசமான செயல்களில் ஈடுபடும் நபரை உடனடியாக அந்நிறுவனத்திலிருந்து அகற்றி பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், 181 மகளிர் உதவி எண் மற்றும் இணையதள முகவரி https://shebox.nic.in யையும் அதிகளவில் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், பெண்களுக்கு பணியிடங்களில் பாலியல் ரீதியான வன்கொடுமை நடைபெறும் பட்சத்தில் அவர் நிரந்தர பணியாளராகவோ, தற்காலிக பணியாளராகவோ இருந்தாலோ எந்த ஒரு பாரபட்சமும் பார்க்காமல் உள்ளக குழு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவிக்க ஏதுவாக அனைத்து நிறுவனங்களிலும் புகார் பெட்டி அமைக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் புகார் பெட்டி மாதிரி அறிமுகப்படுத்தப்பட்டது. இப்புகார் பெட்டிகள் அனைவரும் பார்க்கும் வகையிலும், கண்காணிப்பு கேமராக்கள் பார்வையில் இல்லாத இடத்தில் பொருத்தப்பட வேண்டும் எனவும், பெறப்படும் புகார் மனுக்களின் விவரங்களை உள்ளக குழுக்கள் இரகசியமாக பாதுகாக்க வேண்டும் எனவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே பல நிறுவனங்களில் உள்ளக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அமைக்கப்படாத நிறுவனங்கள் உடனடியாக அமைத்து உறுப்பினர்கள் விவரங்களை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஒருவார காலத்திற்குள் சமரப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அலுவலர் விஜயமீனா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஷகிலா பானு, , மாவட்ட கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்), T.மேரி டயனா ஜெயந்தி, சஜின், துணை இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், உள்ளூர் குழு உறுப்பினர்கள் சிலுவை வஸ்தியான், வழக்கறிஞர் ஆனி சோபியா ரெக்ஸ்லின், தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், தனியார் தொழிற்சாலை மற்றும் கடைகளின் நிர்வாகிகள், தனியார் பள்ளி தலைமையாசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital




New Shape Tailors




Thoothukudi Business Directory