» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 1:09:15 PM (IST)
சாத்தான்குளம் அருகே சுதந்திர தின விழாவில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது பைக் விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் நடுவக்குறிச்சி தாமரைமொழி வள்ளுவர் தெருவைச் சேர்ந்த முத்துவேல். பத்திரிகையாளர் சங்கத் தலைவராக உள்ளார். இவரது கபிலேஷ் (18). இவர், கொம்மடிக்கோட்டையில் உள்ள சங்கர பகவதி கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்றுவிட்டு, தனது பைக்கில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
தட்டார்மடம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த கபிலேஷை மீட்டுச் சிகிச்சைக்காகத் திசையன்விளை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் உடற்கூறாய்வுக்காகச் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்துத் தட்டார்மடம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியில் ஓணம் பண்டிகை
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:49:36 PM (IST)

எஸ்.ஐ. ரகு கணேஷுக்கு 2 நாட்கள் அவசரகால விடுப்பு: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:13:26 PM (IST)

தூத்துக்குடியில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் செல்போன், பணம் பறிப்பு - வாலிபர் கைது!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:48:46 AM (IST)

திருச்செந்தூரில் 100 அடி தூரம் உள்வாங்கிய கடல்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:34:00 AM (IST)

தூத்துக்குடியில் பஸ் நிலையம் அருகே செல்போன் பறிப்பு: 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:14:51 AM (IST)

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்குத் தேர்வான தூத்துக்குடி மாணவருக்கு அமைச்சர் ஸ்ரீநாத் பாராட்டு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:02:37 AM (IST)








