» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பஸ் நிலையம் அருகே செல்போன் பறிப்பு: 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:14:51 AM (IST)
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே ஓய்வுபெற்ற டிக்கெட் பரிசோதகரிடம் பைக்கில் வந்த இருவர் செல்போனைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி கிப்சன்புரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி. இவரது மகன் ஜான் கென்னடி (63). இவர் அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் டிக்கெட் பரிசோதகராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஜான் கென்னடி இன்று காலை 6 மணியளவில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
பேருந்து நிலையம் அருகிலுள்ள ஜவுளிக்கடை முன்பாகச் சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள், ஜான் கென்னடியின் சட்டப் பையிலிருந்த ரூ.10,000 மதிப்பிலான செல்போனைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து ஜான் கென்னடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியில் ஓணம் பண்டிகை
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:49:36 PM (IST)

எஸ்.ஐ. ரகு கணேஷுக்கு 2 நாட்கள் அவசரகால விடுப்பு: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:13:26 PM (IST)

தூத்துக்குடியில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் செல்போன், பணம் பறிப்பு - வாலிபர் கைது!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:48:46 AM (IST)

திருச்செந்தூரில் 100 அடி தூரம் உள்வாங்கிய கடல்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:34:00 AM (IST)

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்குத் தேர்வான தூத்துக்குடி மாணவருக்கு அமைச்சர் ஸ்ரீநாத் பாராட்டு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:02:37 AM (IST)

மதுபோதையில் தகராறு செய்த மகன் சரமாரியாக வெட்டிக்கொலை : தந்தை வெறிச்செயல்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 10:41:52 AM (IST)








