» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்குத் தேர்வான தூத்துக்குடி மாணவருக்கு அமைச்சர் ஸ்ரீநாத் பாராட்டு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:02:37 AM (IST)

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்குத் தேர்வாகியுள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவர் ஜெ.ஜேசன் திரேவின் சிங்கிற்கு அமைச்சர் ஸ்ரீநாத் பாராட்டு தெரிவித்தார்.
இந்தியப் பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) நடத்திய ஸ்கேட்டிங் போட்டியில் தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவர் ஜெ.ஜேசன் திரேவின் சிங் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்றார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்கு இவர் தகுதி பெற்றுள்ளார்.
தேசிய போட்டிக்குத் தேர்வாகி தூத்துக்குடி மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த மாணவர் ஜெ.ஜேசன் திரேவின் சிங்கிற்கு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் பொன்னாடை அணிவித்து, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். மேலும், மேலும் பல சாதனைகளைப் படைத்து வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தினார்.
இந்நிகழ்வின் போது ஸ்கேட்டிங் பயிற்சியாளர் ஷாரா முபாரக், துணை பயிற்சியாளர்கள் முகேஷ், ஜெகதீசன் ஆகியோர் உடனிருந்தனர். தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கவுள்ள மாணவர் ஜெ.ஜேசன் திரேவின் சிங், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் டாக்டர் ஜேம்ஸ் சுந்தர்சிங் மற்றும் கதிரியக்க நிபுணர் மருத்துவ, ஆலோசகர் ஜாஸ்லின் ஜேம்ஸ்கின் தம்பதியரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியில் ஓணம் பண்டிகை
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:49:36 PM (IST)

எஸ்.ஐ. ரகு கணேஷுக்கு 2 நாட்கள் அவசரகால விடுப்பு: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:13:26 PM (IST)

தூத்துக்குடியில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் செல்போன், பணம் பறிப்பு - வாலிபர் கைது!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:48:46 AM (IST)

திருச்செந்தூரில் 100 அடி தூரம் உள்வாங்கிய கடல்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:34:00 AM (IST)

தூத்துக்குடியில் பஸ் நிலையம் அருகே செல்போன் பறிப்பு: 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:14:51 AM (IST)

மதுபோதையில் தகராறு செய்த மகன் சரமாரியாக வெட்டிக்கொலை : தந்தை வெறிச்செயல்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 10:41:52 AM (IST)








