» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி நெய்தல் திருவிழாவில் குமரி கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் உயிரிழப்பு : திமுகவினர் நேரில் அஞ்சலி

ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 12:43:12 PM (IST)

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் நெய்தல் திருவிழாவில் பங்கேற்க வந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள ஆண்டிப்பொற்றைப் பகுதியைச் சேர்ந்த ரவியின் மகன் பிரசாந்த் (33). திருமணமாகாத இவர், 'குமரி கானகப் பறவைகள் கலைக்குழுவின்' ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வந்தார். தூத்துக்குடி வஉசி கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் நெய்தல் கலைத் திருவிழாவில் தனது குழுவினருடன் பங்கேற்பதற்காகப் பிரசாந்த் தூத்துக்குடி வந்திருந்தார்.

நேற்று கலை நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகத் தயாராகிக் கொண்டிருந்த பிரசாந்த், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தபோது எதிர்பாராதவிதமாகத் திடீரெனக் கீழே சரிந்து விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பிரசாந்த் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தென்பாகம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமுக முக்கிய நிர்வாகிகள் நேரில் அஞ்சலி:

தகவலறிந்த திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி., தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று உயிரிழந்த பிரசாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது கலைக்குழுவினருக்கு ஆறுதல் கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory