» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கணவரை டைல்ஸ் கல்லால் அடித்துக் கொன்ற மனைவி உட்பட 3பேர் கைது!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 9:21:06 AM (IST)
தூத்துக்குடி அருகே மரக்கடைத் தொழிலாளி கொடூரமான முறையில் டைல்ஸ் கற்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த ஆரோக்கியராஜின் மகன் ஞானப்பிரகாசம் (47). இவர் மாப்பிள்ளையூரணியில் உள்ள ஒரு மரக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருடன் அத்திமரப்பட்டியைச் சேர்ந்த கிளின்டன் என்பவரும் பணியாற்றி வந்தார்.
கருத்து வேறுபாடு காரணமாக ஞானப்பிரகாசத்தைப் பிரிந்த அவரது மனைவி பாரதி, தனது 2 குழந்தைகளுடன் கூட்டாம்புளியில் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று கூட்டாம்புளி வீட்டிற்குச் சென்ற ஞானப்பிரகாசம், மனைவி பாரதியிடம் தகராறு செய்துவிட்டுத் தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார். இந்நிலையில், ஞானப்பிரகாசத்தை மர்ம நபர்கள் டைல்ஸ் கற்களால் கொடூரமாகத் தாக்கி கொலை செய்தனர்.
இக்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய புதுக்கோட்டை போலீசாருக்குப் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன. ஞானப்பிரகாசத்தின் மனைவியான பாரதிக்கும், மரக்கடையில் ஞானப்பிரகாசத்துடன் வேலை பார்த்து வந்த கிளின்டனுக்கும் இடையே நெருங்கிய பழக்கம் இருந்துள்ளது.
இதனால் கிளின்டனுக்குத் தனது மகளைத் திருமணம் செய்து வைக்க பாரதி முடிவு செய்துள்ளார். ஆனால், இதற்கு ஞானப்பிரகாசம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சம்பவத்தன்று இரவிலும் இதுதொடர்பாக ஞானப்பிரகாசத்திற்கும் பாரதிக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது.
பாரதியின் தூண்டுதலின் பேரில், கிளின்டன் தனது நண்பரான வினோத் என்பவருடன் இணைந்து ஞானப்பிரகாசத்தைத் டைல்ஸ் கல்லால் அடித்துத் தலையில் தாக்கி கொலை செய்தது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, கொலைக்குக் காரணமான மனைவி பாரதி, மரக்கடை ஊழியர் கிளின்டன் மற்றும் அவரது நண்பர் வினோத் ஆகிய 3 பேரையும் புதுக்கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியில் ஓணம் பண்டிகை
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:49:36 PM (IST)

எஸ்.ஐ. ரகு கணேஷுக்கு 2 நாட்கள் அவசரகால விடுப்பு: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:13:26 PM (IST)

தூத்துக்குடியில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் செல்போன், பணம் பறிப்பு - வாலிபர் கைது!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:48:46 AM (IST)

திருச்செந்தூரில் 100 அடி தூரம் உள்வாங்கிய கடல்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:34:00 AM (IST)

தூத்துக்குடியில் பஸ் நிலையம் அருகே செல்போன் பறிப்பு: 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:14:51 AM (IST)

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்குத் தேர்வான தூத்துக்குடி மாணவருக்கு அமைச்சர் ஸ்ரீநாத் பாராட்டு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:02:37 AM (IST)








