» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிளாஸ்டிக் லைட்டர்களால் ஆண்டுக்கு ரூ.600 கோடி தீப்பெட்டி வர்த்தகம் பாதிப்பு: உற்பத்தியாளர்கள் கவலை!

வியாழன் 13, ஆகஸ்ட் 2026 8:41:03 AM (IST)

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் லைட்டர்களின் ஊடுருவலால் ஆண்டுக்கு ரூ.600 கோடி அளவிலான தீப்பெட்டி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.

கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் விஜய் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் இதுகுறித்துத் தெரிவித்ததாவது: நூற்றாண்டு பழமையான தீப்பெட்டி தொழிலுக்கு பிளாஸ்டிக் லைட்டர்கள் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. ரூ.20-க்கும் குறைவான விலையுள்ள பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, தற்போது அதன் உதிரிபாகங்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு உள்ளூரிலேயே தயாரிக்கப்படுகின்றன. 

இவை தரம் குறைந்ததாகவும், பாதுகாப்பற்றதாகவும், மண்ணில் மக்காததாகவும் உள்ளன.தீப்பெட்டித் தொழிலில் 80 சதவீதம் பெண் தொழிலாளர்களே பணிபுரிகின்றனர். பிளாஸ்டிக் லைட்டர்களின் வரவால் ஆண்டுக்குச் சுமார் 25 சதவீதம், அதாவது ரூ.600 கோடி அளவிலான தீப்பெட்டி வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு முழுமையான தடை விதிக்க வலியுறுத்தித் தமிழக முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து மனு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அரசின் முறையான ஆதரவு கிடைத்தால் தீப்பெட்டி உற்பத்தியைப் பெருக்குவதுடன், வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்க முடியும் என உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இச்சந்திப்பின் போது சங்கச் செயலாளர் வரதராஜன், பொருளாளர் ராஜவேல், துணைத்தலைவர் அம்புரோஸ், நேஷனல் சிறுத்தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க முன்னாள் செயலாளர் சேதுரத்தினம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory