» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குற்ற வழக்குகளில் ஆஜராகாத பிரபல ரவுடி கைது : பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 7:56:28 AM (IST)
2 கொலை வழக்குகள் உட்பட 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி டி.வி.கே. நகர், 3-வது மைல் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிராஜன் என்ற வேலுசாமியின் மகன் காளியப்பன் என்ற 'காடை காளியப்பன்' (33). இவர் மீது ஆறுமுகனேரி, தூத்துக்குடி தெற்கு, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 2 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் அடிதடி உட்பட 20-க்கும் மேற்பட்ட தீவிர குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளுக்குத் தொடர்ந்து ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், காடை காளியப்பனுக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, ஆறுமுகனேரி காவல் நிலைய ஆய்வாளர் ரென்னீஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆறுமுகனேரி, ராஜாமணியபுரம் பகுதியில் ஒழிந்திருந்த காடை காளியப்பனைப் போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட காடை காளியப்பனைத் தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:20:19 PM (IST)

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்வளத்துறை பணிகளை ஆட்சியர் விஷூ மகாஜன் நேரில் களஆய்வு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:54:51 PM (IST)

அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா மாட்டு வண்டி எல்லைப் பந்தயம்: சீறிப் பாய்ந்த காளைகள்!!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:19:43 AM (IST)







