» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காமன்வெல்த் பளுதூக்குதலில் வெள்ளி வென்ற வீரருக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

வியாழன் 13, ஆகஸ்ட் 2026 7:44:12 AM (IST)

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற கோவில்பட்டி வீரர் ராஜா முத்துப்பாண்டியனுக்குத் தூத்துக்குடி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டியன், காமன்வெல்த் போட்டியில் இந்திய சார்பில் பங்கேற்று 65 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்தார். இவரது சாதனையைப் பாராட்டிப் பிரதமரும், தமிழக முதல்வரும் வாழ்த்து தெரிவித்தனர்.

டெல்லியில் பிரதமரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற பிறகு தூத்துக்குடிக்கு வருகை தந்த அவருக்கு, தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரது தந்தை முத்துப்பாண்டியன், மாவட்ட பளுதூக்கும் சங்க நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் சார்பில் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரவேற்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது: பதக்கம் வென்று திரும்பிய எனக்கு ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டிய தமிழக முதல்வருக்கும், நேரில் அழைத்து வாழ்த்திப் பளுதூக்குதலில் சிறந்த வீரர்களை உருவாக்க அறிவுறுத்திய பிரதமருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

13 வயது முதல் பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இன்றைய இளைஞர்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகாமல், தங்களை விளையாட்டில் அதிகளவில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியில் போதிய பயிற்சி மையங்கள் இல்லை. 

எனவே தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில் இங்கு சர்வதேச தரத்திலான உடற்பயிற்சி மற்றும் பளுதூக்குதல் பயிற்சி மையம் அமைத்துத் தந்தால், பல இளம் வீரர்கள் உருவாவார்கள். அடுத்து ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுப் பதக்கம் வெல்வதே எனது முதன்மை லட்சியமாகும் என்றார்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory