» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 14-ல் உள்ளூர் விடுமுறை : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
புதன் 12, ஆகஸ்ட் 2026 4:09:35 PM (IST)

காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா பேராலயத் திருவிழாவினை முன்னிட்டு, வருகிற 14ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம், காமநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற தூய பரலோக மாதா பேராலயத் திருவிழாவினை முன்னிட்டு, வருகிற 14.08.2026 (வெள்ளிக்கிழமை) அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஆகஸ்டு 15-ஆம் நாள் கொண்டாடப்படும் இத்திருவிழாவின் 9-ஆம் நாள் திருவிழா (14.08.2026) உச்சகட்டமாக இருப்பதாலும், பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதாலும் மாணவர்களின் நலன் கருதி உள்ளூர் விடுமுறை வழங்க மாவட்ட ஆட்சியர் கோரிக்கை விடுத்திருந்தார்.
14.08.2026 அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி நிறுவனங்களுக்கும் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கும் (தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில்) உள்ளூர் விடுமுறை அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, 22.08.2026 (சனிக்கிழமை) அன்று வேலை நாளாகச் செயல்படும்.
இந்த விடுமுறை நாளானது செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசர அலுவலகப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:20:19 PM (IST)

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்வளத்துறை பணிகளை ஆட்சியர் விஷூ மகாஜன் நேரில் களஆய்வு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:54:51 PM (IST)

அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா மாட்டு வண்டி எல்லைப் பந்தயம்: சீறிப் பாய்ந்த காளைகள்!!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:19:43 AM (IST)







