» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி குடிநீர் பிரச்னையில் அமைச்சர் மவுனம் ஏன்? — பாஜக சராமாரி கேள்வி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:11:16 AM (IST)
ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்கு மேலாகியும் தூத்துக்குடி மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் உரிய கவனம் செலுத்தவில்லை என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் தீவிரமடைந்து, பொதுமக்கள் குடிநீருக்காக திண்டாடி வரும் நிலையில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் எங்கே இருக்கிறார்? மக்களின் அடிப்படை பிரச்னையை தீர்க்க இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? என தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் ஏ.எம். ராஜேஷ் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் வழங்கும் பகுதியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக குடிநீர் வரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவிக்கும் நேரத்தில், மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் பிரச்னையை சமாளிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், தொகுதி மக்களின் பிரதிநிதியாகவும் அமைச்சராகவும் இருக்கும் ஸ்ரீநாத் இதுவரை என்ன செய்தார் என்பது தான் புரியாத புதிராக உள்ளது என தெரிவித்துள்ளார். குடிநீர் தட்டுப்பாடு குறித்து மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து அமைச்சர் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினாரா? குடிநீர் வரத்து பாதிப்புக்கான காரணத்தை நேரில் ஆய்வு செய்தாரா? மாற்று குடிநீர் ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டாரா? பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து செயல்திட்டம் வகுத்தாரா? என்பதற்கு அமைச்சர் பதில் அளிக்க வேண்டும்.
தூத்துக்குடி மாநகரம் மட்டுமல்லாமல் புறநகர் பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு மக்களை கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதிகாரிகளை ஒருங்கிணைத்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய அமைச்சர் மவுனமாக இருப்பது ஏன்? என பா.ஜ., கேள்வி எழுப்பியுள்ளது. ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்கு மேலாகியும் தூத்துக்குடி மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து அமைச்சர் உரிய கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் பொதுமக்கள் மத்தியில் ஏற்கனவே எழுந்துள்ளது.
மேலும், தூத்துக்குடி மக்களின் குடிநீர் பிரச்னையை அரசியல் அறிக்கைகளுக்குள் முடித்துவிடாமல், அமைச்சர் உடனடியாக களத்தில் இறங்க வேண்டும். மாநகராட்சி ஆணையர், குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்து அவசர கூட்டம் நடத்தி, குடிநீர் விநியோகத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும்.
"மக்கள் தண்ணீருக்காக தவிக்கும் போது அமைச்சர் மவுனமாக இருக்க முடியாது. பதவி என்பது அதிகாரத்தை அனுபவிப்பதற்காக அல்ல; மக்களின் பிரச்னையை தீர்ப்பதற்காக. தூத்துக்குடி மக்களின் குடிநீர் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
மக்கள் கருத்து
BalaAug 12, 2026 - 12:30:27 PM | Posted IP 162.1*****
avanungalukku reels podave neram illai.. ithula makkal pirachanai yeppadi theriyum..
அடி முட்டாள்Aug 12, 2026 - 12:17:18 PM | Posted IP 162.1*****
ஆகஸ்ட் 15 ஆம் தேதி கு பிறகு தினமும் தண்ணீர் வரும் என்று திமுக குடும்பம் மேயர் கூறுகிறாங்க, அது என்ன ? சும்மா நாடகம் ஆ ? போட்டோ சூட் ஆ ? விளம்பரமா?
மேலும் தொடரும் செய்திகள்

அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:20:19 PM (IST)

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்வளத்துறை பணிகளை ஆட்சியர் விஷூ மகாஜன் நேரில் களஆய்வு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:54:51 PM (IST)

அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா மாட்டு வண்டி எல்லைப் பந்தயம்: சீறிப் பாய்ந்த காளைகள்!!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:19:43 AM (IST)








Bala என்ற கொத்தடிமை அவர்களுக்குAug 13, 2026 - 01:01:34 PM | Posted IP 162.1*****