» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தொகுதி மறுவரையறை மசோதாவைக் கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கண்டன பேரணி!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 8:37:41 PM (IST)

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவைக் கண்டித்து, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன பேரணி இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாநகர் மாவட்டத் தலைவர் எஸ். எம். சகாயராஜ் தலைமையில் பேரணி நடைபெற்றது.மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளுக்கு எதிராகப் பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இப்போராட்டத்தில் மண்டலத் தலைவர்கள் சேகர், ஐசன் சில்வா, நிர்மல் கிறிஸ்டோபர், மேற்கு மண்டலப் பொறுப்பாளர் ஜான் சாமுவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டேனியல் ராஜ், சுடலையாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் மாவட்டத் துணைத் தலைவர்கள் மடத்தூர் தனபால் ராஜ், பாலகிருஷ்ணன், அந்தோணி ஜெயராஜ், டேவிட் வசந்தகுமார், பி.ஜே.சி. சுரேஷ், நாகேந்திரன், ராஜாராம், மாவட்டப் பொதுச்செயலாளர்கள் கோபால், மைக்கேல் பிரபாகர், புல்டன் ஜெயின், ரஞ்சிதம் ஜெபராஜ், ஆண்ட்ரூ ஜாப்ரின் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் இக்னேசியஸ், காமாட்சி தனபாலன், கதிர்வேல் மாரியப்பன், ஜோனாதன், அசன் பாத், வழக்கறிஞர் சகாயராஜ் உட்படத் திரளான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:20:19 PM (IST)

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்வளத்துறை பணிகளை ஆட்சியர் விஷூ மகாஜன் நேரில் களஆய்வு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:54:51 PM (IST)

அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா மாட்டு வண்டி எல்லைப் பந்தயம்: சீறிப் பாய்ந்த காளைகள்!!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:19:43 AM (IST)








balaAug 12, 2026 - 09:58:14 AM | Posted IP 162.1*****