» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டுக்குள் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு : போலீசார் விசாரணை!

புதன் 24, ஜூன் 2026 10:26:26 AM (IST)

சாத்தான்குளம் அருகே பூட்டிய வீட்டுக்குள் மூன்று நாட்களாக அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகிலுள்ள பேய்குளம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சேர்மதுரை. இவரது மனைவி ஜெயலட்சுமி (67). இவர் இதய நோய்க்காகத் தினசரி மாத்திரை உட்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், இவரது வீட்டிலிருந்து திடீரெனத் துர்நாற்றம் வீசியதை அடுத்து பக்கத்து வீட்டுப் பெண் கவனித்துப் பார்த்துள்ளார். 

அப்போது ஜெயலட்சுமி வீட்டுக்குள்ளேயே அழுகிய நிலையில் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் இறந்து 3 நாட்கள் ஆகலாம் எனத் தெரியவந்துள்ள நிலையில், மரணத்திற்கான காரணம் குறித்துப் போலீசார் விசாரிக்கின்றனர்.

மூதாட்டி தற்கொலை: 

கோவில்பட்டி அருகிலுள்ள சிதம்பரம்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த முத்துராஜ் மனைவி குருவம்மாள் (75). இவர் கடந்த சில தினங்களாகக் கடுமையான உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த குருவம்மாள், வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார். 

உடனடியாக அவர் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் அங்குச் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory