» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவிலில் தரிசனக் கட்டணம் உயர்வா? : அமைச்சர் ரமேஷ் விளக்கம்!
புதன் 24, ஜூன் 2026 11:28:38 AM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்புத் தரிசன டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதாக வெளியான தகவல்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளார்!
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சிறப்புத் தரிசனக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகிப் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்துப் புதிய விளக்கமளித்துள்ள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், திருச்செந்தூர் கோவிலில் தரிசனக் கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கோவில் நிர்வாக நடைமுறைகள் மற்றும் வருவாய் விபரங்களை மேம்படுத்துவது தொடர்பாக, தரிசனக் கட்டண மாற்றங்கள் குறித்துப் பக்தர்களிடம் ஆலோசனைகளும் கருத்துகளும் மட்டுமே கேட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுவிட்டதாகப் பரவி வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு மாறானவை என்றும், தற்போதைக்குக் கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அமைச்சர் ரமேஷ் விளக்கமளித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பரந்தூர் பாணியில் நீதி கேட்கும் பொட்டலூரணி மக்கள்: தமிழக முதல்வருக்கு கோரிக்கை..!
புதன் 24, ஜூன் 2026 12:34:06 PM (IST)

திருச்செந்தூர் ரயில்கள் ஜூன் 26 முதல் முழுமையாக ரத்து : கூடுதல் பஸ்களை இயக்க பயணிகள் கோரிக்கை!
புதன் 24, ஜூன் 2026 12:23:01 PM (IST)

வீட்டுக்குள் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு : போலீசார் விசாரணை!
புதன் 24, ஜூன் 2026 10:26:26 AM (IST)

முதலமைச்சர் விஜய் பற்றி அவதூறு பேச்சு: திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு!
புதன் 24, ஜூன் 2026 10:09:43 AM (IST)

தூத்துக்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: அதிகாரி உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு!
புதன் 24, ஜூன் 2026 7:53:31 AM (IST)

அரசுப் பேருந்தில் இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: நடத்துநர் அதிரடி கைது!
புதன் 24, ஜூன் 2026 7:48:24 AM (IST)








