» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அனல்மின் நிலையம் அருகே பணம் வைத்துச் சூதாட்டம்: 4 பேர் அதிரடி கைது; 3 பைக்குகள் பறிமுதல்!
புதன் 24, ஜூன் 2026 7:42:21 AM (IST)
கல்லாமொழி அனல்மின் நிலையம் பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் பணம் வைத்துச் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து பணம் மற்றும் வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்!
தூத்துக்குடி மாவட்டம், கல்லாமொழி அனல்மின் நிலையம் பின்புறம் உள்ள சேரன் தோட்டம் அருகே காட்டுப் பகுதியில் சிலர் காசு வைத்துச் சூதாடுவதாகக் குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முகேஷ் அரவிந்த் ஆகியோர் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்குச் சென்று அதிரடி சோதனை நடத்தினர். போலீசாரைக் கண்டதும் சூதாடிக் கொண்டிருந்த கும்பல் தப்பியோட முயன்றது.
எனினும், போலீசார் துரத்திச் சென்று 4 பேரை மடக்கிப் பிடித்தனர். சிலர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அவர்கள் சுப்பராயபுரம் வடக்குத்தெரு ஆதிராஜா மகன் ராஜசேகர் (45), வேதகோட்டை விளைராமசாமிபுரம் தெற்குத்தெரு கோபாலகிருஷ்ணன் மகன் மார்க்கண்டேயன் (48), வைத்தியலிங்கபுரம் வடக்குத்தெரு முத்து செல்வன் மகன் ராஜா சிங் (37) ஆணைகுடி வடக்கு த்தெருவை சேர்ந்த ராஜரத்தினம்மகன் தினகரன் (66) ஆகியோர் என தெரிய வந்தது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள், ரூ.1,500 ரொக்கம், 4 மொபைல் போன்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும், தப்பியோடிய நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: அதிகாரி உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு!
புதன் 24, ஜூன் 2026 7:53:31 AM (IST)

அரசுப் பேருந்தில் இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: நடத்துநர் அதிரடி கைது!
புதன் 24, ஜூன் 2026 7:48:24 AM (IST)

வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் : நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு அறிவிப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:34:49 PM (IST)

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலீசாருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:34:29 PM (IST)

மினி ஜவுளிப் பூங்கா கட்டுமானப் பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:14:47 PM (IST)

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் வேலைவாய்ப்பு: ஜூலை 10-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:54:39 PM (IST)








