» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் : நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு அறிவிப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:34:49 PM (IST)

திருநெல்வேலி காவல் சரகத்திற்கு உட்பட்ட 4 மாவட்டங்களில் பொதுமக்களின் குறைகளை விரைவாகக் கேட்டுத் தீர்வு காணும் நோக்கில், வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "தமிழ்நாடு காவல்துறை சட்டம் - ஒழுங்கு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்படி, திருநெல்வேலி காவல் சரகத்தின் கீழ் உள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் "பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள்" புதிய நடைமுறையாகக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இனிவரும் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்களிடமிருந்து புகார்கள் மற்றும் குறைகள் மனுக்களாகப் பெறப்பட உள்ளன.
பொதுமக்கள் தங்களது மனுக்களைத் திருநெல்வேலி காவல் சரக அலுவலகத்தில் உள்ள டிஐஜியிடமும், அந்தந்த மாவட்ட காவல் அலுவலகங்களில் உள்ள எஸ்பிக்களிடமும், மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் உள்ள டிஎஸ்பிக்களிடமும், அந்தந்த காவல் நிலையங்களில் உள்ள இன்ஸ்பெக்டர்களிடமும் நேரடியாக அளித்துப் பயன்பெறலாம்.
இந்த குறைதீர்ப்பு நாட்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, விரைவான மற்றும் உரிய தீர்வு வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இப்புதிய திட்டத்தின் கீழ், முதல் குறைதீர்ப்பு நாளானது நாளை (24.06.2026, புதன்கிழமை) நடைபெற உள்ளது.
எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களது குறைகள் மற்றும் மனுக்களைச் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளிடம் நேரடியாகத் தெரிவித்துப் பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலீசாருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:34:29 PM (IST)

மினி ஜவுளிப் பூங்கா கட்டுமானப் பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:14:47 PM (IST)

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் வேலைவாய்ப்பு: ஜூலை 10-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:54:39 PM (IST)

அரசு பணித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா
செவ்வாய் 23, ஜூன் 2026 4:42:06 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் போக்குவரத்து விதிமுறை குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செவ்வாய் 23, ஜூன் 2026 4:40:07 PM (IST)

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 6 புதிய திட்டங்கள் : மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 23, ஜூன் 2026 3:57:19 PM (IST)








