» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஜூலை 3ஆம் தேதி மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - ஆட்சியர் தகவல்!

செவ்வாய் 23, ஜூன் 2026 3:09:13 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற ஜூலை 3ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் 2026 ஜுலை மாதம் வெள்ளிக்கிழமை 03.07.2026 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில் வைத்து முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பதிவு  செய்த ஊர்த்தலைவர்கள் / மீனவ பிரதிநிதிகள் / மீனவர்கள் அனைவருக்கும், பதிவு செய்து கொண்ட பொருள் குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படும். 

அப்பொருள் மீதான கருத்துக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அங்கேயே பெறப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கக் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory