» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு பணித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா
செவ்வாய் 23, ஜூன் 2026 4:42:06 PM (IST)

நாசரேத்தில் அரசு பணித் தேர்விற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.
நாசரேத் தூய யோவான் பேராலயம் மற்றும் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து ஜீன் 22 முதல் வாரத்தில் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் மதியம் 3:30 மணி முதல் 6:30 மணி வரை அரசு பணித் தேர்விற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.
இதில் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமியின் பயிற்சியாளர்களால் அரசு மற்றும் வங்கி பணிகளுக்கான தேர்வு எழுதுபவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இதன் மூலம் பயிற்சி பெறுகிறவர்களவேலை கிடைக்கும் வரை தொடர்ந்து பயிற்சி பெறவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இப் பயிற்சிக்கான தொடக்க விழா நாசரேத் தூய யோவான் பேராலய சபா மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. விழாவிற்கு ஆரம்பமாக பேராலய உதவி குருவானவர் தனசேகர் ராஜா ஜெபம் செய்தார். பேராலய பொருளாளர் லேவி அசோக் சுந்தரராஜ் அனைவரையும் வரவேற்றார். நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார், நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி முதல்வர் பென்னிசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
திருநெல்வேலி வருமான வரித்துறை அதிகாரி ரூதர்சன் தனது வெற்றிக்கான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி மேலாளர் பாலகுரு அரசுத் தேர்வு சிறப்பு பயிற்சிகள் குறித்துப் பேசினார். தொடர்ந்து தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ஆண்ட்ரூஸ் ராக்லண்ட் நன்றியுரை ஆற்றினார். நிறைவாக நாசரேத் தூய யோவான் பேராலய தலைமை குரு அல்பர்ட் ஜெயசிங் தாமஸ் இறையாசி வழங்கினார்.
இவ் விழாவில் திருமண்டல செயற்குழு உறுப்பினரும் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரித் தாளாளர் மாமல்லன், நாசரேத் ஆர்ட் தொழிற்பயிற்சி மையத் தாளாளர் ஆர்ச்பால்டு ஜாண்சன், மர்காஷிஸ் மெட்ரிக் பள்ளித் தாளாளர் ஸ்டெல்லா சாலமோன், திருமறையூர் கனோன் தாமஸ் சித்தர் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளித் தாளாளர் டேவின் சாலமோன், நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கால்டுவெல், புனித யோவான் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கரோலின் ஜெசுவதி, திருமண்டல பெருமன்ற உறுப்பினர் செல்வின், நாசரேத் பேராலய பாஸ்ட்ரேட் கமிட்டி உறுப்பினர்கள் சந்திரன், ஜெபக்குமார் சாமுவேல், ஜெயக்குமார், ஜாஸ்பர், பிரதீப், மாணிக்கராஜ், ஜோஸ்பெல் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் : நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு அறிவிப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:34:49 PM (IST)

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலீசாருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:34:29 PM (IST)

மினி ஜவுளிப் பூங்கா கட்டுமானப் பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:14:47 PM (IST)

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் வேலைவாய்ப்பு: ஜூலை 10-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:54:39 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் போக்குவரத்து விதிமுறை குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செவ்வாய் 23, ஜூன் 2026 4:40:07 PM (IST)

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 6 புதிய திட்டங்கள் : மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 23, ஜூன் 2026 3:57:19 PM (IST)








