» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி கல்லூரியில் போக்குவரத்து விதிமுறை குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி

செவ்வாய் 23, ஜூன் 2026 4:40:07 PM (IST)



கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். கல்லூரி உறுப்பினர்கள் அருண், ராஜ்மோகன் மற்றும் கல்லூரி முதல்வர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் பேராசிரியர் கற்குவேல் ராஜ் வரவேற்புரை வழங்கினார். கோவில்பட்டி போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் வெங்கடேஷ் போக்குவரத்து விதிமுறை குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார். 

முன்னாள் போக்குவரத்து காவல் ஆய்வாளர் லட்சுமணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விதிகள், பொறுப்பான வாகன இயக்க விதிமுறை குறித்து பவர் பாயிண்ட் விளக்க உரை மூலமாக விதிகளை விளக்கி பேசினார். மாணவர்களுக்கான சமூகப் பொறுப்புணர்வுகள் குறித்து பயனுள்ள கருத்துக்களை வழங்கினார். 

தொடர்ந்து மாணவர்கள் சாலை விதிகள் குறித்து கேட்ட கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.  நிகழ்ச்சியில் ஆங்கிலத்துறை தலைவர் சபிதா சண்முகப்பிரியா பேராசியர்கள் ஜெய்சிங் ராஜ் கோகிலா,கனக பிரபா, திவ்யா உள்பட முதலாமாண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் பிரேமலதா நன்றியுரை ஆற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory