» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் வேலைவாய்ப்பு: ஜூலை 10-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

செவ்வாய் 23, ஜூன் 2026 4:54:39 PM (IST)

தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி ஒருங்கிணைந்த சேவை மையங்களில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குடும்பம், சமுதாயம் மற்றும் பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவும் வகையில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையங்களில் சுழற்சி முறையில் பணிபுரிய பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்குத் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி உள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரங்களைச் சார்ந்த பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

காலிப்பணியிடங்கள் மற்றும் தகுதி விபரங்கள் வருமாறு:

தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம் (கோவில்பட்டி - 1 இடம்): கணினி அல்லது ஐடி துறையில் இளங்கலைப் பட்டம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சுடன் COA முடித்திருக்க வேண்டும். தரவு மேலாண்மை மற்றும் வீடியோ கான்பரன்சிங் பணிகளில் 3 ஆண்டுகள் அனுபவம் அவசியம். சம்பளம்: ரூ. 20,000.

வழக்குப் பணியாளர்கள் (கோவில்பட்டி - 2 இடங்கள்): சட்டம், சமூகப்பணி, உளவியல், சமூகவியல் அல்லது சமூக அறிவியலில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி மற்றும் உளவியல் ஆலோசனை சார்ந்த பணியில் 3 ஆண்டுகள் அனுபவமும், 24/7 மணி நேரச் சுழற்சி முறையில் பணியாற்றும் திறனும் கொண்டிருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 18,800.

பாதுகாவலர் (கோவில்பட்டி - 1 இடம்): 10-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 24/7 மணி நேரச் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும். சம்பளம்: ரூ. 12,000.

பல்நோக்கு உதவியாளர் (தூத்துக்குடி - 1 இடம்): 10-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்று, சமையல் மற்றும் அலுவலகப் பராமரிப்பு பணிகள் தெரிந்திருக்க வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 10,000.

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் வரும் 10.07.2026 மாலை 5 மணிக்குள் தங்களது விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் "மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி - 628101" என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு 0461-2325606 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory