» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முதலமைச்சர் விஜய் பற்றி அவதூறு பேச்சு: திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு!
புதன் 24, ஜூன் 2026 10:09:43 AM (IST)
தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் மீது 2 பிரிவுகளின் கீழ் ஆத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிகையுடன் வீட்டில் இருப்பதாகக் கூறி, அவரை ஒருமையில் அவதூறாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
பொதுக்கூட்டத்தில் கலவரத்தைத் தூண்டும் விதமாகப் பேசியது மற்றும் முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பியது தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் நகரச் செயலாளர் செல்வமுருகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில், ஆத்தூர் காவல் நிலைய போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது 353 மற்றும் 354 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் தரிசனக் கட்டணம் உயர்வா? : அமைச்சர் ரமேஷ் விளக்கம்!
புதன் 24, ஜூன் 2026 11:28:38 AM (IST)

வீட்டுக்குள் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு : போலீசார் விசாரணை!
புதன் 24, ஜூன் 2026 10:26:26 AM (IST)

தூத்துக்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: அதிகாரி உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு!
புதன் 24, ஜூன் 2026 7:53:31 AM (IST)

அரசுப் பேருந்தில் இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: நடத்துநர் அதிரடி கைது!
புதன் 24, ஜூன் 2026 7:48:24 AM (IST)

அனல்மின் நிலையம் அருகே பணம் வைத்துச் சூதாட்டம்: 4 பேர் அதிரடி கைது; 3 பைக்குகள் பறிமுதல்!
புதன் 24, ஜூன் 2026 7:42:21 AM (IST)

வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் : நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு அறிவிப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:34:49 PM (IST)








