» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விஷ மாத்திரை சாப்பிட்டு வாலிபர் தற்கொலை: மனைவியுடன் குடும்பத் தகராறில் சோகம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 11:28:59 AM (IST)
முறப்பநாடு அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த வாலிபர் விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் எல்லைக்குட்பட்ட கீழசெக்காரக்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் அதிமூலபெருமாள் மகன் காளிபெருமாள். சமையல் வேலை செய்து வந்த இவருக்குத் திருமணமாகி ஒரு வருடமே ஆகிறது. காளிபெருமாளுக்கும் இவருடைய மனைவிக்கும் இடையே குடும்பப் பிரச்சினை காரணமாகத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் மன வருத்தத்தில் இருந்த காளிபெருமாள், கொம்புகாரநத்தம் குளத்தங்கரைப் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு, உளுந்து மூட்டைக்குப் பயன்படுத்தப்படும் விஷ மாத்திரையை எடுத்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.விஷம் உடல் முழுவதும் பரவிய நிலையில் குளத்தங்கரையில் அவர் மயங்கிக் கிடந்துள்ளார்.
இதனைத் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு, அவசர சிகிச்சைக்காகத் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர், காளிபெருமாள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் : நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு அறிவிப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:34:49 PM (IST)

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலீசாருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:34:29 PM (IST)

மினி ஜவுளிப் பூங்கா கட்டுமானப் பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:14:47 PM (IST)

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் வேலைவாய்ப்பு: ஜூலை 10-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:54:39 PM (IST)

அரசு பணித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா
செவ்வாய் 23, ஜூன் 2026 4:42:06 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் போக்குவரத்து விதிமுறை குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செவ்வாய் 23, ஜூன் 2026 4:40:07 PM (IST)








