» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டில் ஃபிரிட்ஜ் வெடித்துப் பயங்கர தீ விபத்து: முறப்பநாடு அருகே பரபரப்பு!

செவ்வாய் 23, ஜூன் 2026 11:22:07 AM (IST)

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே ஆறாம்பண்ணை பகுதியில் வீட்டில் இருந்த ஃபிரிட்ஜ் திடீரென வெடித்துத் தீ பிடித்ததில் மின்சாதனப் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முறப்பநாடு காவல் எல்லைக்குட்பட்ட ஆறாம்பண்ணை அன்பு நகரைச் சேர்ந்தவர் செய்யது அப்துல் கரீம். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜாஸ்மின் (37). இவர் தனது இரண்டு மகன்களுடன் அதே பகுதியில் உள்ள அப்துல் காதர் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்குக் குடியிருந்து வருகிறார். 

இன்று அதிகாலை 4 மணி அளவில், இவர்களது வீட்டில் இருந்த ஃபிரிட்ஜ் (குளிர்சாதனப் பெட்டி) எதிர்பாராதவிதமாகத் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துத் தீ பிடித்தது. ஃபிரிட்ஜ் வெடித்த வேகத்தில் தீ மளமளவெனப் பரவி, அந்த அறையில் இருந்த மிக்சி மற்றும் இன்வெர்ட்டர் பேட்டரி உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் முழுவதும் தீக்கிரையாகிச் சேதமடைந்தன.

அதிகாலை நேரத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டதால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். எனினும், ஜாஸ்மின் மற்றும் அவருடைய இரண்டு மகன்களும் எவ்வித காயமுமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஃபிரிட்ஜ் வெடித்ததற்கான காரணம் குறித்துத் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory