» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பெண்ணிடம் செல்போன் பறிப்பு: பிரபல ரவுடிகள் இருவர் கைது!
செவ்வாய் 23, ஜூன் 2026 10:39:52 AM (IST)
தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட பிரபல ரவுடிகள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!
தூத்துக்குடி அருகே உள்ள வேப்பலோடை பாண்டியாபுரம் கிராமம் தெற்கு தெருவில் வசிப்பவர் காவிரி (36). இவருடைய கணவர் இசக்கிமுத்து உடல்நலக்குறைவு காரணமாகக் கடந்த 22-ஆம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாகக் காவிரி மருத்துவமனையில் இருந்து வந்துள்ளார்.
நேற்று இரவு 8 மணி அளவில் காவிரி தன் கணவருக்கு உணவு வாங்குவதற்காகத் தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு வி.வி.டி. சிக்னல் அருகிலுள்ள உணவகம் ஒன்றிற்குச் சென்றுள்ளார். உணவு வாங்கிவிட்டுத் தனது செல்போனில் பேசியபடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் காவிரியிடமிருந்த 5,000 ரூபாய் மதிப்புள்ள செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பியோடியது.
இதுகுறித்து காவிரி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப்பதிவு செய்து, விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினார்.
விசாரணையின் அடிப்படையில், தூத்துக்குடி அண்ணா நகர் 5-வது தெருவைச் சேர்ந்த குருஸ் அம்புரோஸ் (21), அண்ணா நகர் 6-வது தெருவைச் சேர்ந்த முனீஸ்வரன் (26) ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தலுக்குப் பயன்படுத்திய பைக் மற்றும் திருடப்பட்ட செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் தென்பாகம், மத்திய பாகம், ஆத்தூர் ஆகிய காவல் நிலையங்களில் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும், இவர்கள் பிரபல ரவுடிகள் என்பதும் தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் இரண்டு பேரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் : நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு அறிவிப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:34:49 PM (IST)

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலீசாருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:34:29 PM (IST)

மினி ஜவுளிப் பூங்கா கட்டுமானப் பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:14:47 PM (IST)

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் வேலைவாய்ப்பு: ஜூலை 10-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:54:39 PM (IST)

அரசு பணித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா
செவ்வாய் 23, ஜூன் 2026 4:42:06 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் போக்குவரத்து விதிமுறை குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செவ்வாய் 23, ஜூன் 2026 4:40:07 PM (IST)








