» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குழந்தையின் கல்லீரல் அறுவை சிகிச்சை : 4 மணி நேரத்தில் சான்று வழங்கிய வட்டாட்சியர்!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:39:07 AM (IST)
எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 7 மாதக் கைக்குழந்தை ஒன்றின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக விண்ணப்பித்த நான்கு மணி நேரத்திற்குள் உறவுமுறை சான்று வழங்கிய வட்டாட்சியருக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டத்திற்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 7 மாதக் கைக்குழந்தை ஒன்றிற்கு நிலவிய கல்லீரல் பிரச்சினை காரணமாகக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யச் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றை அதன் பெற்றோர் அணுகியுள்ளனர். அப்போது, அறுவை சிகிச்சைக்குச் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் இருந்து உறவுமுறை சான்று பெற்று வருமாறு மருத்துவமனை நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சமூக வலைத்தளம் மூலமாகக் கோவில்பட்டியைச் சேர்ந்த கரு.இராஜசேகரனைத் தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவர் சமூக செயற்பாட்டாளர் கப்பிகுளம் பாபுவுடன் இணைந்து எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று வட்டாட்சியர் சுபாவைச் சந்தித்துக் குழந்தையின் அவசர நிலையை விளக்கியுள்ளனர்.
மனுவின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட வட்டாட்சியர் சுபா, எவ்வித காலதாமதமும் இன்றி சோழபுரம் குறுவட்ட வருவாய் ஆய்வாளரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாகச் சான்று கிடைக்கப் பரிந்துரை செய்தார். அதன் பேரில் சோழபுரம் வருவாய் ஆய்வாளர் மற்றும் சண்முகபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்து வட்டாட்சியரிடம் சமர்ப்பித்தனர்.
அறிக்கை வந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர் அலுவலகத்தில் இல்லாத நிலையிலும், மாற்று ஏற்பாடாக வேறொரு பிரிவு அலுவலரைத் தொடர்பு கொண்டு உடனடியாக உறவுமுறை சான்றைத் தட்டச்சு செய்ய வட்டாட்சியர் உத்தரவிட்டார். இதன் மூலம், மாலை அலுவலக நேரம் முடியும் முன்பாக, விண்ணப்பித்த நான்கு மணி நேரத்திற்குள் உரிய சான்றிதழ் வழங்கப்பட்டது.
வருவாய்த்துறையில் சான்றிதழ்கள் பெறப் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படும் சூழலில், குழந்தையின் மருத்துவ அவசரத்தை உணர்ந்து மனிதநேயத்துடன் துரிதமாகச் செயலாற்றிய எட்டயபுரம் வட்டாட்சியர் சுபாவின் இந்தச் சேவைக்குப் பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் : நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு அறிவிப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:34:49 PM (IST)

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலீசாருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:34:29 PM (IST)

மினி ஜவுளிப் பூங்கா கட்டுமானப் பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:14:47 PM (IST)

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் வேலைவாய்ப்பு: ஜூலை 10-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:54:39 PM (IST)

அரசு பணித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா
செவ்வாய் 23, ஜூன் 2026 4:42:06 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் போக்குவரத்து விதிமுறை குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செவ்வாய் 23, ஜூன் 2026 4:40:07 PM (IST)








