» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குழந்தைகளின் சமூக வலைத்தளப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சட்டம்: முதலமைச்சருக்குக் கோவில்பட்டி எழுத்தாளர் மனு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:25:47 AM (IST)
16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சமூக வலைத்தளப் பயன்பாட்டினால் ஏற்படும் உளவியல் தாக்கங்களைக் கட்டுப்படுத்தக் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என வலியுறுத்திக் கோவில்பட்டியைச் சேர்ந்த சிறார் கதை எழுத்தாளர் சுரேஷ்குமார் தமிழக முதலமைச்சருக்குக் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
கோவில்பட்டியைச் சேர்ந்த சிறார் கதை எழுத்தாளர் சுரேஷ்குமார், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மத்தியில் சமூக வலைத்தளங்களின் அதீத பயன்பாடு மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து நடத்திய அனுபவ ஆய்வின் அடிப்படையில் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவின் விபரங்கள் வருமாறு:
சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் உடனடி அங்கீகாரம் (லைக்ஸ், கமெண்ட்ஸ்) குழந்தைகளின் மூளையில் போதைக்கு அடிமையாவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் மனச்சோர்வு, பதற்றம், தாழ்வு மனப்பான்மை, தூக்கமின்மை, உடல் உழைப்பு குறைதல் மற்றும் கல்வி செயல்திறன் குறைதல் போன்ற எதிர்மறை விளைவுகள் ஏற்படுகின்றன. 16 வயதுக்குட்பட்டோரின் மூளை முழுமையாக வளர்ச்சி அடையாததால், அவர்கள் இதன் கவர்ச்சிக்கு எளிதில் அடிமையாகின்றனர்.
தமிழகத்தின் தற்போதைய சூழல்: தமிழகத்தில் 14 முதல் 16 வயதுடைய குழந்தைகளில் 90 விழுக்காட்டினர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர். மேலும், 26 விழுக்காட்டிற்கும் அதிகமான இளம் வயதினர் சமூக வலைத்தளங்களை அதிகப்படியாகப் பயன்படுத்துகின்றனர். நகர்ப்புற மற்றும் கிராமப்புற குழந்தைகளிடையே பயன்பாட்டு முறைகள் வேறுபட்டாலும், அடிமையாதல் அபாயம் இரு தரப்பிலும் பொதுவாக உள்ளது.
முக்கியப் பரிந்துரைகள்:
சட்டமியற்றுதல்: ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலங்களைப் பின்பற்றி, 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தக் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும்.
வயது சரிபார்ப்பு: 16 வயதுக்குட்பட்டவர்கள் கணக்கு தொடங்குவதைத் தடுக்கக் கடுமையான வயது சரிபார்ப்பு முறைகளை அமல்படுத்த அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். மத்திய அரசின் வரைவு தகவல் தொழில்நுட்ப விதிகள் 2026-ஐ தமிழக அரசு ஆதரிக்க வேண்டும்.
பாடத்திட்டம் மற்றும் விழிப்புணர்வு: அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தைப் போல், பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் இணைய பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் குடியுரிமை குறித்த கட்டாயப் பாடங்களைச் சேர்க்க வேண்டும். சமூக வலைத்தள அடிமையாதலின் அறிகுறிகள் குறித்துப் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாநிலம் தழுவிய விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நடத்த வேண்டும்.
மனநல ஆலோசனை: டிஜிட்டல் அடிமையாதலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் மூலம் எளிதில் அணுகக்கூடிய மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை சேவைகளை வழங்க வேண்டும்.
தமிழக எதிர்காலத் தூண்களான குழந்தைகளின் நலன் கருதி, இந்த ஆய்வறிக்கையின் பரிந்துரைகளை ஏற்று அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் எழுத்தாளர் சுரேஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் : நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு அறிவிப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:34:49 PM (IST)

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலீசாருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:34:29 PM (IST)

மினி ஜவுளிப் பூங்கா கட்டுமானப் பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:14:47 PM (IST)

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் வேலைவாய்ப்பு: ஜூலை 10-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:54:39 PM (IST)

அரசு பணித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா
செவ்வாய் 23, ஜூன் 2026 4:42:06 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் போக்குவரத்து விதிமுறை குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செவ்வாய் 23, ஜூன் 2026 4:40:07 PM (IST)









கோ. சுரேஷ்குமார்Jun 23, 2026 - 10:34:13 AM | Posted IP 104.2*****