» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கண்மாய் நீர் பிரச்சினையில் இரு வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு: இருவர் கைது!

செவ்வாய் 23, ஜூன் 2026 7:49:23 AM (IST)

விளாத்திகுளம் அருகே கண்மாயில் ஆடுகள் தண்ணீர் குடிப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில், இரண்டு வாலிபர்களை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

காடல்குடி அருகேயுள்ள நூத்தலக்கரை மற்றும் சின்னையாபுரம் ஆகிய கிராமங்களுக்குப் பொதுவான கண்மாய் ஒன்றை இரு கிராம மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கண்மாய் தண்ணீரைப் பயன்படுத்துவது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்துள்ளது.

சின்னையாபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் பாலமுருகன் (24), ஆறுமுகம் மகன் பிரவீன்குமார் (21) ஆகியோர் தங்களது ஆடுகளை அந்த கண்மாய்க்கு ஓட்டிச் சென்று தண்ணீர் குடிக்க வைக்க முயன்றுள்ளனர். அப்போது அங்கிருந்த நூத்தலக்கரை கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஆடுகள் தண்ணீர் குடிக்கக் கூடாது எனத் தடுத்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் இருவரும் ஆடுகளைக் கிராமத்திற்கு ஓட்டிச் சென்றுவிட்டனர்.

அன்று இரவு 7 மணியளவில் நூத்தலக்கரை கிராமத்தைச் சேர்ந்த சிலர் பாலமுருகன் மற்றும் பிரவீன்குமாரைச் செல்போனில் அழைத்து, சமாதானம் பேச வருமாறு கூறியுள்ளனர். அதனை நம்பி அங்குச் சென்ற இருவரையும் ஒரு கும்பல் திடீரென அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடியது. இதில் காயமடைந்த இருவரையும் சின்னையாபுரம் கிராம மக்கள் மீட்டு, தீவிர சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்துக் காடல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நூத்தலக்கரை கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், சரவணன் ஆகிய இருவரைக் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரைத் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் இரு கிராமங்களிலும் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்கப் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory