» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கட்டாரிமங்கலம் அழகியகூத்தர் கோயிலில் ஆனி உத்திரத் திருவிழா: பன்னிரு திருமுறை விண்ணப்பம்!

செவ்வாய் 23, ஜூன் 2026 7:29:59 AM (IST)



சாத்தான்குளம் வட்டாரத்தில் உள்ள முக்கியச் சிவன் கோயில்களில் ஆனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

நடராஜரின் பஞ்ச விக்ரஹ ஸ்தலங்களில் ஒன்றான கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தர் திருக்கோயிலில் நேற்று திங்கட்கிழமை ஆனித் திருமஞ்சன சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலையில் அழகிய கூத்தர் அருட்பணி மன்றத்தினரின் பன்னிரு திருமுறை விண்ணப்பத்துடன் பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து, நடராஜப் பெருமானுக்குப் பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. மதியம் 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் நடராஜபிள்ளை உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

வைரவம் ஞானாதீஸ்வரர் கோயில்: 

சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம் ஞானாதீஸ்வரர் சமேத சிவகாமி அம்மன் கோயிலில் மாலை நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இங்குள்ள நடராஜப் பெருமானுக்குப் பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அம்பாள், சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

வரகுணபாண்டீஸ்வரர் கோயில்: 

சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளக்குறிச்சி வரகுணபாண்டீஸ்வரர் சமேத வாடாமலையம்மன் கோயிலில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜப் பெருமானுக்குப் பல்வேறு வகையான அபிஷேகங்கள் மற்றும் உச்சிக்காலச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இந்த மூன்று சிவன் கோயில்களிலும் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory