» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி, மதரஸா மாணவர்களுக்குப் பாராட்டு விழா!

திங்கள் 22, ஜூன் 2026 8:03:48 PM (IST)



தூத்துக்குடி மாநகரில் 2025-26 கல்வி ஆண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் 80 விழுக்காட்டிற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், மக்தப் மதரஸாவில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும் 'ஹெல்பிங் டு அதர்ஸ்' (H2O) அமைப்பு சார்பில் மில்லர்புரத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவிற்கு அமைப்பின் தலைவர் அப்துல் கபூர் அஹமத் தலைமை தாங்கினார். விழாவில் மாணவர் முஹம்மது ஆரிஜ் கிராஅத் ஓத, அமைப்பின் செயலாளர் காதர் முஹைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். அமைப்பின் ஆளுநர்கள் ஜாபர் சாஹிப், நூருல்லாஹ் நவாஸ், அப்துல் அஜீஸ், ரஹ்மான் பிஜிலி, ஆடிட்டர் முஹம்மது உமர் பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன், மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி முதல்வர் இம்தாதுல்லாஹ் ஃபாஜில் பாகவி மற்றும் கல்வி ஆலோசகர் அப்துல் மதீன் ஆகியோர் கலந்துகொண்டு, சாதனை படைத்த மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டிப் பேசினர்.

இந்நிகழ்வில் அமைப்பின் துணைத் தலைவர்கள் இம்தியாஸ் பாஷா, பஷீர், துணைச் செயலாளர்கள் பொறியாளர் அப்துல் ரஹ்மான், அபுதாஹிர், வழக்கறிஞர் இப்ராஹிம் உட்படப் பெருந்திரளான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவின் நிறைவாக அமைப்பின் பொருளாளர் முபாரக் அலி நன்றியுரை ஆற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory