» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாலிபரை வெட்டிய நண்பருக்கு போலீசார் வலைவீச்சு!
திங்கள் 22, ஜூன் 2026 8:00:44 PM (IST)
குரும்பூர் அருகே முன் விரோதம் காரணமாக நண்பனை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள நெட்டையன் காலனியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் சுரேந்தர் (26). இவருக்கும், இவருடைய நண்பரான சொக்கப்பழங்கரை கிழக்குத் தெருவைச் சேர்ந்த பிச்சை மகன் மாரிமுத்து (28) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தெற்கு நல்லூரில் உள்ள குளக்கரையில் மாரிமுத்து தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுரேந்தர், மாரிமுத்துவிடம் பேசிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அந்த நேரத்தில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், மாரிமுத்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுரேந்தரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த சுரேந்தரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, உடனடியாகக் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்துப் பெறப்பட்ட புகாரின் பேரில் குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மாரிமுத்துவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதில், காயமடைந்த சுரேந்தர் மற்றும் தப்பியோடிய மாரிமுத்து ஆகிய இருவர் மீதும் ஏற்கனவே வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் : நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு அறிவிப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:34:49 PM (IST)

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலீசாருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:34:29 PM (IST)

மினி ஜவுளிப் பூங்கா கட்டுமானப் பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:14:47 PM (IST)

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் வேலைவாய்ப்பு: ஜூலை 10-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:54:39 PM (IST)

அரசு பணித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா
செவ்வாய் 23, ஜூன் 2026 4:42:06 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் போக்குவரத்து விதிமுறை குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செவ்வாய் 23, ஜூன் 2026 4:40:07 PM (IST)








