» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாரதியார் வித்யாலயம் பள்ளியில் சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
திங்கள் 22, ஜூன் 2026 3:23:35 PM (IST)

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஆரோக்கிய ஜென்ஸி, மாணவிகள், பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு அவர்களின் பாதுகாப்பு, சட்ட உரிமைகள், சைபர் குற்றங்கள் மற்றும் இணையவழி மோசடிகளில் இருந்து எச்சரிக்கையாக இருப்பதன் அவசியம் குறித்து விரிவாக விளக்கினார்.
பாலியல் தொல்லைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான தகவல்களை எவ்வித பயமுமின்றி, உடனடியாகக் காவல் துறைக்குத் தெரிவிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
அவசர காலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பு கொண்டு உடனடியாக உதவி பெறுவதற்கான முக்கியச் சேவை எண்களான 100 (காவல் துறை), 181 (மகளிர் உதவி எண்), 1098 (குழந்தைகள் உதவி எண்) மற்றும் 1930 (சைபர் குற்றப் புகார் எண்) ஆகியவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பெண் காவலர்கள் செல்வகுமாரி, சந்தனமாரி, காவலர் அசாருதீன் மற்றும் முதுகலை ஆசிரியர் மரகதவள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான முழுமையான ஏற்பாடுகளைப் பள்ளித் தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் : நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு அறிவிப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:34:49 PM (IST)

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலீசாருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:34:29 PM (IST)

மினி ஜவுளிப் பூங்கா கட்டுமானப் பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:14:47 PM (IST)

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் வேலைவாய்ப்பு: ஜூலை 10-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:54:39 PM (IST)

அரசு பணித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா
செவ்வாய் 23, ஜூன் 2026 4:42:06 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் போக்குவரத்து விதிமுறை குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செவ்வாய் 23, ஜூன் 2026 4:40:07 PM (IST)








